2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

3ஆவது சுற்றுப் பாதையில் சந்திரயான் 3

Freelancer   / 2023 ஜூலை 19 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்திரயான் -3 விண்கலத்தை 3-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் முயற்சி வெற்றிகரமாக செய்யப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவு தொடர்பான ஆய்வுக்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக  விண்ணில் கடந்த 14 ஆம் திகதி செலுத்தப்பட்டது.

பின்னர் ஜூலை 17-ம் திகதியன்று 2-வது சுற்றுப்பாதைக்கு சந்திரயான் -3 விண்கலத்தை உயர்த்தும் முயற்சி வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்தது. இந்நிலையில், விண்கலத்தை 3-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணியை தரைக் கட்டுபாட்டு மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் வெற்றிகரமாக மேற்கொண்டனர்.

அடுத்தக் கட்ட உந்துதல் பணி எதிர்வரும் 20-ம் திகதி (இன்று) மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. பெங்களூருவில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சந்திரயான் - 3 விண்கலத்தை, இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஓகஸ்ட் 23ம் திகதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ள சந்திரயான் - 3, நிலவு தொடர்பான பல்வேறு ஆய்வு தகவல்களை இஸ்ரோவிற்கு அனுப்ப உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X