2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

306 அரியவகை உயிரினங்கள் சிக்கின

Freelancer   / 2023 ஜூலை 31 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்து நாட்டில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 306 அரியவகை உயிரினங்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

மும்பை விமான நிலையத்திற்கு அரியவகை உயிரினங்கள் கடத்தி வரப்பட்டு உள்ளதாக வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிகாரிகள் சரக்கு பொதி  பிரிவிற்கு சென்று சோதனை செய்தபோது பொதி வெளிநாட்டை சேர்ந்த 306 அரியவகை உயிரினங்கள் உயிருடன் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் 100-க்கும் மேற்பட்ட சிறியவகை ஆமைகள், 110 நத்தைகள், 30 நண்டுகள் போன்றவை அடங்கும். அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து அரியவகை உயிரினங்களை கடத்த முயன்ற நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X