Editorial / 2024 ஜூலை 11 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா ஆண்டார்குளம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி மீனா. இவர்களது 2-வது மகள் நந்தினி (வயது21). விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் உள்ள ஒரு நூற்பாலையில் வேலை செய்து வந்தார். அப்போது நந்தினிக்கும், ராஜபாளையத்தை சேர்ந்த குருநாதன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர்கள் இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் இந்த தகவல் அறிந்ததும் இவர்களை இருவீட்டினரும் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் இவர்கள் இருவரும் ராஜபாளையம் இ.எஸ்.ஐ. காலனியில் வசித்தனர். இவர்களுடன் குருநாதனின் தாயாரும் வசித்தார். தற்போது நந்தினி 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவரை, மாமியார் காஞ்சனா அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுபற்றி தனது தாயாரிடம் மன வேதனையுடன் கூறி உள்ளார்.
இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது நந்தினி தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இதுகுறித்து நந்தினியின் தாயார் மீனா கொடுத்த புகாரின்பேரில் ராஜபாளையம் தெற்கு பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
31 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago