2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

5 மாத கர்ப்பிணியைப் பாலியல் வன்கொடுமை செய்த உறவினர்

Ilango Bharathy   / 2023 மார்ச் 20 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

5 மாத கர்ப்பிணியொருவர் தனது உறவினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்  ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம், நபரங்பூர் மாவட்டத்தில் உள்ள ஜகன்நாத்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லலியா ருஞ்சிகர்.   இவரது மனைவி பத்மா   சுகாதாரத்துறையில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர்களது  உறவுக்காரப் பெண்ணொருவர் அதே பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவர் 5 மாத கர்ப்பிணி எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையில், கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி  பத்மா ,குறித்த கர்ப்பிணியை  மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி அவரை ஒரு ஆள் அரவம் இல்லாத வீடொன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு பத்மாவின் கணவர் இருந்த நிலையில், அவர் அக் கர்ப்பிணியைப்  பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதனை பத்மா   தனது தொலைபேசியில் வீடியோ எடுத்துள்ளதோடு, இதனை வெளியில் கூறினால் குறித்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் கடும் உடல், மன உளைச்சலுக்கு ஆளான நிலையில், குறித்த வீடியோ இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த பெண்  உடனடியாக இது குறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, லலியா மற்றும் பத்மா ஆகிய இருவரையும் கைது பொலிஸார் சிறையில் அடைத்தனர்.

தனிப்பட்ட குடும்ப தகராறே இதற்கு காரணம் என்று முதல்கட்ட தகவல்கள் கூறப்படும் நிலையில், சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .