2025 ஜூலை 19, சனிக்கிழமை

800க்கு குழந்தையை விற்ற தம்பதி

Freelancer   / 2023 ஜூலை 06 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ஜா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கராமி முர்மு - முசு தம்பதியினர். முசு தமிழ்நாட்டில் வேலை செய்து வரும் நிலையில், கராமி முர்மு ஒடிசாவில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் முர்முவுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது. வறுமை காரணமாக அந்த குழந்தையை வளர்க்க முடியாது என்று நினைத்த அவர், குழந்தையை 800 ரூபாய்க்கு விற்றுள்ளார்.

இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த கணவர்  இரண்டாவது குழந்தை குறித்து முர்முவிடம் கேட்டுள்ளார். அதற்கு குழந்தை உயிரிழந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சந்தேகமடைந்த கணவர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பொலிஸார் நடத்திய விசாரணையில் குழந்தை இல்லாத தம்பதிக்கு 800 ரூபாய்க்கு குழந்தை விற்கப்பட்டது தெரியவந்துள்ளது.

 இது தொடர்பாக குழந்தையின் தாய் கராமி முர்மு, குழந்தையை வாங்கிய தம்பதி மற்றும் அதற்கு ஏற்பாடு செய்த இடைத்தரகர் ஆகிய 4 பேரை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X