Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Editorial / 2020 ஜூன் 20 , மு.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேஷம்: கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கி கொள்ளாதீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.
மிதுனம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி இருக்கும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். திடீர் பயணங்கள் செலவுகள் அதிகரிக்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
கடகம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள்.பெற்றோரின் ஆதரவு கிட்டும். நாடி வந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
சிம்மம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். செயல் ஊக்கம் அதிகரிக்கும் நாள்.
கன்னி: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். உடல் நலம் சீராகும். உற்சாகமான நாள்.
துலாம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் பல வேலைகள் தடைப்பட்டு முடியும்.மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.
விருச்சிகம்: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். திருமண முயற்சிகள் பலிதமாகும். திறமைகள் வெளிப்படும் நாள்.
தனுசு: எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளால் உறவினர் நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.
மகரம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள்.அண்டை அயலாரின் அன்புத் தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.
கும்பம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புதிய நல்ல வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். உழைப்பால் உயரும் நாள்.
மீனம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் அடைவீர்கள். வாகனவசதி பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். சாதிக்கும் நாள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
36 minute ago
2 hours ago