Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 29 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேஷம் - நற்குணம் மாற, கௌரவக் குறைச்சல் ஏற்படும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை தேவை. வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கை தேவை.
ரிஷபம் - தாய் சொல்லைத் தட்டாதீர்கள். தூக்கமின்மையால் சோர்வு ஏற்பட்டு முக்கியப் பணிகளில் சுணக்கம் ஏற்படும். பொருள்களைப் பத்திரமாகப் பாதுகாப்பது அவசியம்.
மிதுனம் - சகோதர ஒற்றுமை ஓங்கும். உளவாரப் பணிகளில் ஈடுபாடு கொள்வீர்கள். அனைத்திலும் வெற்றி நிச்சியம். இன்பச் சுற்றுலாப் பயணங்கள் சென்று மகிழ்வீர்கள்.
கன்னி - தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவித்துப் பெண்கள் வீட்டுச் செலவுகளை அதிகரிக்கச் செய்வர். செலவுகளைக் குறைத்தால் பணமுடையைத் தவிர்க்கலாம். வீண் அலைச்சல்கள் தவிர்க்க முடியாததாகும்.
மகரம் - காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். முயற்சியைக் கைவிடாது தடைக் கற்களைப் படிக்கற்களாக மாற்றித் துணிவுடன் செயல்களில் இறங்கினால். வெற்றி உறுதி.
கடகம் - வழக்குகளை ஒத்திப் போடுவது நல்லது. அதிகாரிகளிடம் பணிவோடு நடப்பது பதவி உயர்வுக்கு உதவும்.. வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்களைப் பாதுகாப்பாக வைப்பது அவசியம்.
சிம்மம்- உங்கள் குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். புதிய ஆராய்ச்சிக் கல்வியால் தேர்ச்சியும், வாழ்க்கையில் முன்னேற்றமும் ஏற்படும். பெரியோரின் அன்பு பொங்கும். தொழில் வளம் பெருகும்.
துலாம் - மனமகிழ்ச்சி அதிகரிக்கும் வண்ணம் தனவரவும் அதிகரிக்கும். ஆரோக்கிய மேம்பாட்டால் ஆனந்தம் பெருகும். கல்வியில் வெற்றி கிடைக்கும். பிரிவால் ஏற்பட்ட துன்பம், இணைவால் மாறும்.
மீனம் - தொழில் மூலமான தனவரவு அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். பயண சுகம் ஏற்படும். தனக்கென அழகிய தனிவீடு அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் குதுகலமாய் நிறைவேறும்.
தனுசு - அனைத்துச் செயல்களிலும் எளிதில் வெற்றி கிடைக்கும். உல்லாசமான புனிதப் பயணங்கள் ஏற்படும். மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடும்.
விருச்சிகம் - புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும். அரசு ஆதரவால் உத்தியோக வாய்ப்புக்கள் பெருகி, வாழ்க்கையில் முன்னேறும் நிலை உருவாகும். தன்னம்பிக்கை, தேகதிடம், தைரியம் ஆகியவை ஓங்கும்.
கும்பம் - மனைவி மூலம் தனவரவு அதிகரிக்கும். சிலரின் காதல் வெற்றி பெற்று கல்யாணத்தில் முடியும். வியாபாரிகள் தங்கள் சாதுர்யமான பேச்சால் அதிகம் இலாபம் ஈட்டுவர்.
2 minute ago
23 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
23 minute ago
32 minute ago