2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (01.04.2012)

A.P.Mathan   / 2012 மார்ச் 31 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (01.04.2012)

மேடம்
இல்லத்து விசேடங்களுக்கு செல்வீர்கள். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் கிடைக்கப்பெறுவீர்கள். இளைஞர்கள் விரும்பிய துறையில் பிரகாசிப்பார்கள்.
அஸ்வினி: மகிழ்ச்சி
பரணி: இன்பம்
கிருத்திகை 1ஆம் பாதம்: செலவு


இடபம்
பணத்தை முதலீடு செய்வதற்கு முன்னர் நன்கு யோசிப்பது நல்லது. உறவினர்களிடையே அன்பு பலப்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கிருத்திகை 2, 3, 4: கவனம்
ரோகிணி: மகிழ்ச்சி
மிருகசீரிடம் 1, 2: இன்பம்



மிதுனம்
பணவரவுகளில் பற்றாக்குறை ஏற்பட்டு சரியாகும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெறுவீர்கள். பிரபலங்களின் நட்புக்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.
மிருகசீரிடம் 2, 3: இன்பம்
திருவாதிரை: மகிழ்ச்சி
புனர்பூசம்: நட்பு


கடகம்
வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது. கை, கால் மூட்டுகளில் வலி வந்து நீங்கும். மற்றவர்களின் உதவியை நம்பி எந்த செயலிலும் இறங்க வேண்டாம். 
புனர்பூசம்: துன்பம்
பூசம்: பிரச்சினை
ஆயில்யம்: கஷ்டம்


சிம்மம்
உடல் நலம் நன்றாக இருக்கும். பணயில் இருப்பவர்கள் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: இன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: லாபம்


கன்னி 
பணியில் சுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சில சலசலப்புகள் காணப்படும். உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. 
உத்திரம் 2, 3, 4: வெறுப்பு
அஸ்தம்: துன்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: செலவு


துலாம்
பிறரிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்காமல் போகலாம். நிர்வாகப் பொறுப்புக்கள் கூடும். வியாபாரத்திற்கான கேள்வி அதிகரிக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: இன்பம்
சுவாதி: துன்பம்
விசாகம் 1, 2, 3: வெற்றி


விருட்சிகம்
வியாபார ரகசியங்களை வெளியிடாமல் இருப்பது நல்லது. பங்குச் சந்தைகளில் சுமாரான போக்கே காணப்படும். பெண்களுக்கு நன்மை குறைவு
விசாகம் 4: துன்பம்
அனுசம்: துக்கம்
கேட்டை: அலைச்சல்


தனுசு
அரசாங்கத்தில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். முக்கிய பணிக்காக தங்கள் சேமிப்புகள் குறையும். ஏற்றுமதி இறக்குமதியில் அதிக லாபங்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: தனலாபம்
உத்திராடம் 1ஆம் பாதம்: வெற்றி


மகரம்
இடமாற்றத்தினால் சில தோல்விகள் உண்டாகும். பணியில் மன வேதனைகள் காணப்படும். பணவிடயங்களில் யாரையும் நம்ப வேண்டாம்.
உத்திராடம் 2, 3, 4: துக்கம்
திருவோணம்: துன்பம்
அவிட்டம் 1, 2: பயம்


கும்பம்
தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
அவிட்டம் 3, 4: கஷ்டம்
சதயம்: துன்பம்
பூரட்டாதி 1, 2, 3: தோல்வி


மீனம்
பணியில் பிரச்சினைகள் உண்டாகும். பிற இனத்தவரால் துன்பம் உண்டாகும்.  விட்டுக்கொடுப்பதன் மூலம் சிக்கல்களைத் தவிர்க்கலாம்.
பூரட்டாதி 4: தவறுகள்
உத்திரட்டாதி: துன்பம்
ரேவதி: தோல்வி


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .