மேடம்
புதிய வேலைக்கான ஏற்பாடுகள் முன்னேற்றம் கொடுக்கும். எதிர்பார்த்த செய்திகள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். விலை உயர்ந்த பொருட்களை பரிசாக பெறுவீர்கள்.
அஸ்வினி : துக்கம்
பரணி : ஆர்வம்
கிருத்திகை 1ஆம் பாதம் : இன்பம்
இடபம்
போக்குவரத்தில் அதிக கவனம் தேவை. உடல் நிலையில் சிறு சிறு உபாதைகள் காணப்படும். துக்கமான நிகழ்ச்சிகள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும்.
கிருத்திகை 2, 3, 4: செலவு
ரோகிணி : வெறுப்பு
மிருகசீரிடம் 1, 2: துன்பம்
மிதுனம்
உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கப்பெறுவீர்கள். உடல் நிலையில் ஆரோக்கியம் காணப்படும். சில நல்ல நண்பர்களின் சேர்க்கை மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
மிருகசீரிடம் 2, 3 : மகிழ்ச்சி
திருவாதிரை : இன்பம்
புனர்பூசம்: நலம்
கடகம்
வீண் திருட்டு பயங்கள் உண்டாகும். இல்லத்தில் உள்ள பெண்களினால் வீண் பிரச்சினைகள் உண்டாகும். மனதில் குழப்பம் மற்றும் மனக்கசப்புகள் உண்டாகும்.
புனர்பூசம்: குழப்பம்
பூசம்: பயம்
ஆயில்யம்: துன்பம்
சிம்மம்
சுப காரியங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் மூலம் மசிழ்ச்சியான செய்திகள் உண்டாகும். ஆலய தரிசனம் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: இன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: அமைதி
கன்னி
வெளியூர் பிரயாணங்கள் ஓரளவு சாதகமாக அமையும். வயிற்றில் வலிகள் தோன்றி மறையும். பணியிடத்தில் சில சங்கடமான சூழ்நிலைகள் உண்டாகலாம்.
உத்திரம் 2, 3, 4: கஷ்டம்
அஸ்தம்: மகிழ்ச்சி
சித்திரை 1, 2ஆம் பாதம்: துன்பம்
துலாம்
அரசாங்க செய்திகள் மகிழ்ச்சியுடையதாக இருக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். பணத் தட்டுப்பாடுகள் இருக்காது.
சித்திரை 3, 4ஆம் பாதம் : வெற்றி
சுவாதி : இன்பம்
விசாகம் 1, 2, 3: மகிழ்ச்சி
விருட்சிகம்
நண்பர்களிடத்தில் அளவுடன் பழகுவது நல்லது. வியாபாரத்தில் பிரச்சினை உண்டாகும். வேலையில் சில சிரமங்கள் காணப்படும்.
விசாகம் 4: துன்பம்
அனுசம் : அலைச்சல்
கேட்டை: கஷ்டம்
தனுசு
வரலாற்று சிறப்பு மிக்க பொருட்களை காண்பீர்கள். இடமாற்றம் மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். குடும்பத்து பெரியவர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.
மூலம்: இன்பம்
பூராடம் : மகிழ்ச்சி
உத்திராடம் 1ஆம் பாதம் : மகிழ்ச்சி
மகரம்
தொழிலில் அதிக லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அரசாங்க காரியங்கள் சாதகமாக அமையும்.
உத்திராடம் 2, 3, 4 : லாபம்
திருவோணம் : வெற்றி
அவிட்டம் 1, 2 : மகிழ்ச்சி
கும்பம்
புதிய தொழில் தி;ட்டம் தீட்டுவீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும். நல்லவர்களின் சேர்க்கை நல்லகாரியங்கள் செய்வதற்கு வழி வகுக்கும்.
அவிட்டம் 3, 4 : மகிழ்ச்சி
சதயம் : உற்சாகம்
பூரட்டாதி 1, 2, 3 : மகிழ்ச்சி
மீனம்
உறவினர்கள் வருகை உண்டாகும். மனம் அமைதியை விரும்பும். நீங்கள் மிகவும் நேசித்த பொருள் உங்களை தேடி வரும்.
பூரட்டாதி 4 : மகிழ்ச்சி
உத்திரட்டாதி : இன்பம்
ரேவதி : மகிழ்ச்சி
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்.
.