2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

முதியோர் தொகை அதிகரிக்கும்

Freelancer   / 2025 செப்டெம்பர் 24 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் சிரேஷ்ட பிரஜைகள் தொடர்பான தேசிய சமவாயம் மற்றும் தேசிய கொள்கைக்காக 2006 ஆம் ஆண்டில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

மாறிவரும் போக்குகளுக்கமைய, இலங்கையின் சிரேஷ்ட பிரஜைகள் தொடர்பான தேசிய சமவாயம் காலத்தோடு தழுவியதாக இற்றைப்படுத்தப்பட வேண்டுமென அடையாளங் காணப்பட்டுள்ளது.

அத்துடன், 2052ஆம் ஆண்டில் 60 வயதுக்கு மேற்பட்ட சனத்தொகை 24.8 சதவீதம் வரை அதிகரிக்குமென ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக அலகால் எதிர்வு கூறப்பட்டுள்ளமையால், முதியோர்களின் நலனோம்புகை மற்றும் உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் அவசியமென அடையாளங் காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, அரச தேசிய கொள்கை வேலைச் சட்டகமான 'மதிப்புமிகுந்த சிரேஷ்ட பிரஜை, அர்த்தமுள்ள இளைப்பாறிய வாழ்வு' தொனிப்பொருளுக்கமைய, முதியோருக்கு சமூக ரீதியான, பொருளாதார ரீதியான, உடலியல் மற்றும் ஆன்மீக ரீதியான திருப்திகரமான வாழ்வுக்காக வசதிகளை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் 'இலங்கையின் முதியோருக்கான தேசிய கொள்கை' தயாரிக்கப்பட்டுள்ளது.

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் சமர்ப்பித்துள்ள குறித்த தேசிய கொள்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .