2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

இன்றைய பலன்கள் (08.07.2013)

A.P.Mathan   / 2013 ஜூலை 07 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (08.07.2013)
 
மேடம்
குடும்பத்தில் பெற்றோர்களுடன் அதிக கருத்து வேறுபாடுகள் காணப்படும். குழந்தைகளின் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிதாக பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
அஸ்வினி : துக்கம்
பரணி : ஆர்வம்
கிருத்திகை 1ஆம் பாதம்: மகிழ்ச்சி
 
 
இடபம்
நினைத்த காரியம் கைகூடும். ஆனாலும் அடிக்கடி மருத்துவ செலவுகள் உண்டாகும். பழைய பொருட்களை விற்று புதிய பொருட்களை வாங்குவீர்கள்.
கிருத்திகை 2, 3, 4: செலவு
ரோகிணி : மாற்றம்
மிருகசீரிடம் 1, 2: இன்பம்
 
 
மிதுனம்
விளையாட்டு துறைகளில் உள்ளவர்களுக்கு பரிசுகள் கிடைக்கும். எடுத்த காரியங்கள் முடிவுக்கு வராமல் இழுபறியாக காணப்படும். முன்வைத்த காலை பின் வைக்க இயலாது அவதிப்படுவீர்கள்.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: துன்பம்
புனர்பூசம்: துக்கம்
 
 
கடகம்
சரியான முடிவு எடுக்க முடியாமல் திணறுவீர்கள். பலரின் ஆலோசனைகள் உங்களை தடுமாற்றத்திற்கு கொண்டு செல்லும். போராடினால் மட்டுமே வெற்றி உண்டாகும்.
புனர்பூசம்: குழப்பம்
பூசம்: விவாதம்
ஆயில்யம்: துன்பம்
 
 
சிம்மம்
உடல் சோர்வும் மன சோர்வும் உண்டாகும். யாரையும் நம்பி தற்சமயம் பண உதவி செய்ய வேண்டாம். கவனமாக செயல்படவும்.
மகம்: கவனம்
பூரம்: துன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: ஏமாற்றம்
 
 
கன்னி
பொறுமையாக செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் பெற்றோர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு செய்யும் தொழிலில் லாபம் குறைந்து காணப்படும்.
உத்திரம் 2, 3, 4: பிரச்சினை
அஸ்தம்: ஆதரவு
சித்திரை 1, 2ஆம் பாதம்: கஷ்டம்
 
 
துலாம்
பழைய கடன்களை அடைக்க புதிய கடன்களை வாங்க நேரிடும். பெண்களுக்கு உத்தியோகத்தில் எதிர்பாராத லாபங்கள் ஏற்படும். சிலர் வேலை தொடர்பாக வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளது.
சித்திரை 3, 4ஆம் பாதம் : தனலாபம்
சுவாதி: மகிழ்ச்சி
விசாகம் 1, 2, 3: கடன்
 
 
விருட்சிகம்
குடும்பத்தில் இருந்து வந்த மருத்துவ செலவுகள் குறையும். வேலைக்கு செல்லும் பெண்கள் கடுமையான பணிசுமைக்கு ஆளாக நேரிடும். கணவன் - மனைவியிடையே அன்பு பலப்படும்.
விசாகம் 4: மகிழ்ச்சி
அனுசம்: சுமை
கேட்டை: அன்பு
 
 
தனுசு
முன்னரே திட்டமிடாததால் சிரமத்திற்கு ஆளாவீர்கள். அதிகரித்து வரும் செலவுகளை சமாளிக்க வரவுகள் காணப்படும். அனாவசியமான பயங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள்.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: பயணம்
உத்திராடம் 1ஆம் பாதம்: ஆசிர்வாதம்
 
 
மகரம்
அதிக பணலாபம் கிடைக்கும். முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். வயது மூத்தவர்களின் சந்திப்பு கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4: லாபம்
திருவோணம்: வெற்றி
அவிட்டம் 1, 2: மகிழ்ச்சி
 
 
கும்பம்
நல்லவர்களின் சேர்க்கை, நல்லகாரியங்கள் செய்வதற்கு வழிகள் கிடைக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும்.
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி
சதயம் : உற்சாகம்
பூரட்டாதி 1, 2, 3: மகிழ்ச்சி
 
 
மீனம்
புண்ணிய செய்திகள் கேட்டல், இதனால் மனம் அமைதியடைதல். காணாமல்போன பொருள் மீண்டும் கிடைத்தல்.
பூரட்டாதி 4: மகிழ்ச்சி
உத்திரட்டாதி : இன்பம்
ரேவதி : மகிழ்ச்சி

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .