2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இன்றைய பலன்கள் (16.09.2014)

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 15 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (16.09.2014)
 
மேடம்
வீட்டு தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோக அனுகூலம் உண்டு. அஞ்சல் வழியில் அனுகூலம் உண்டு.
அஸ்வினி : முன்னேற்றம்
பரணி : லாபம்
கிருத்திகை 1ஆம் பாதம்: இன்பம்
 
 
இடபம்
செய்தொழிலில் மேன்மையும் உயர்வும் கிட்டும்.அரசு சலுகைகள் எதிர்பார்த்தபடியே வந்து சேரும். பாதியில் நின்ற பணிகளை மீண்டும் தொடங்குவீர்கள்.
கிருத்திகை 2, 3, 4: மகிழ்ச்சி 
ரோகிணி : சலுகைகள்
மிருகசீரிடம் 1, 2: இன்பம் 
 
 
மிதுனம் 
ஆரோக்கியம் சீராகி ஆனந்தம் கூடும் நாள். வீடு, நிலம் சம்மந்தமாக எடுத்த முடிவு வெற்றி பெறும். மற்றவர்களின் விமர்சனங்களால் ஏற்பட்ட மனக்குழப்பம் மாறும்.
மிருகசீரிடம் 2, 3: மகிழச்சி
திருவாதிரை: வெற்றி
புனர்பூசம்:  நலம்
 
 
கடகம்
எதையும் யோசித்து செய்ய வேண்டிய நாள். வீடு கட்டும் முயற்சியில் சிறு சிறு தாமதங்கள் ஏற்படலாம். வரவு வருவதற்கு முன்னதாகவே செலவு காத்திருக்கும்.
புனர்பூசம் : கவனம்
பூசம் : தாமதம்
ஆயில்யம் : செலவு
 
 
சிம்மம்
கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் அகலும். தொல்லை தந்தவர்கள் விலகுவார்கள். உறவினர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள்.
மகம்: மகிழச்சி
பூரம்: சந்திப்பு
உத்திரம் 1ஆம் பாதம்: இன்பம்
 
 
கன்னி
அடுத்தவர் நலனில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். உடன் பணிபுரிபவர்களிடம் அனுசரிப்புடன் நடந்து கொள்வது நல்லது. மற்றவர்களின் கருத்தை மதித்து நடப்பீர்கள்.
உத்திரம் 2, 3, 4: அக்கறை
அஸ்தம்: அனுசரிப்பு
சித்திரை 1, 2ஆம் பாதம்: மதிப்பு
 
 
துலாம்
கோரிக்கைகள் நிறைவேறும் நாள். நிதி நிலை உயர்ந்து நிம்மதி கிடைக்கும். பிள்ளைகளின் வருங்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : மகிழ்ச்சி
சுவாதி : லாபம்
விசாகம் 1, 2, 3: அக்கறை
 
 
விருட்சிகம்
சந்தித்த நண்பர்களால் நல்ல செய்தி ஒன்று வந்து சேரும். தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். பணவரவு அதிகரிக்கும்.
விசாகம் 4: நற்செய்தி 
அனுசம்: மகிழ்ச்சி
கேட்டை: லாபம்
 
 
தனுசு
விருப்பங்கள் நிறைவேறும் நாள். மூத்த சகோதரர்கள் உங்களின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவார்கள். நல்ல தகவலைக் கொண்டு கடிதம் வந்து சேரும்.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: அக்கறை
உத்திராடம் 1ஆம் பாதம்: வருகை
 
 
மகரம்
கூட்டாளிகளால் லாபம் உண்டு. பிரியமான சிலரின் சந்திப்பு கிட்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4: லாபம்
திருவோணம்: சந்திப்பு
அவிட்டம் 1, 2: மகிழ்ச்சி
 
 
கும்பம்
விரயங்கள் அதிகரிக்கும் நாள். பயணங்களால் பலன் உண்டு. மாமன் மைத்துனர் வழி ஒத்துழைப்பு கிடைக்கும். 
அவிட்டம் 3, 4: விரயம்
சதயம் : பலன்
பூரட்டாதி 1, 2, 3: மகிழ்ச்சி
 
 
மீனம்
ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைப்பீர்கள். உறவினர்களின் அன்புத்தொல்லைக்கு ஆளாக நேரிடும். அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.
பூரட்டாதி 4:  மகிழ்ச்சி
உத்திரட்டாதி : அன்பு
ரேவதி : அனுசரிப்பு

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .