2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இன்றைய பலன்கள் (17.08.2014)

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 16 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (17.08.2014)
 
மேடம்
நோயாளிகள் உரிய பரிசோதனைகள் மூலம் ஆரோக்கியம் பேணலாம்.மற்றவர்களிடம் பகையை வளர்த்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. இடமாற்ற முயற்சிகள் வெற்றியைத்தரும்..
அஸ்வினி : கவனம்
பரணி : துன்பம்
கிருத்திகை 1ஆம் பாதம்: மகிழ்ச்சி
 
 
இடபம்
நண்பர்களிடம் அளவோடு பழகுவது நல்லது. தொழிலில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். மற்றவர்களிடம் வீண் பேச்சுக்கு ஆளாகாமல் தங்கள் கடமையை செய்வது நன்மையைக் கொடுக்கும். 
கிருத்திகை 2இ3இ4: துக்கம் 
ரோகிணி : குழப்பம்
மிருகசீரிடம் 1, 2: கஷ்டம்
 
 
மிதுனம் 
கலைஞர்களுக்கு பெரிய வாய்ப்புகள்  கிடைக்கும். மன பயம் நீங்கி மனோபலம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். 
மிருகசீரிடம் 2, 3: லாபம் 
திருவாதிரை: மகிழ்ச்சி
புனர்பூசம்: இன்பம்
 
 
கடகம்
பணப் பற்றாக்குறையை சாதாரணமாக சமாளிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.
புனர்பூசம்: செலவுகள்  
பூசம் : வெறுப்பு
ஆயில்யம்: இன்பம்
 
 
சிம்மம்
மற்றவர்கள் மன வேதனை தந்தாலும் அவர்களிடம் சுமூகமாக பழகி சுமூகத்தீர்வு காண்பது பிரச்சினையைக் குறைக்கும். வாடிக்கையாளர்களிடம் முன் கோபம் கொள்ளாமல் இருப்பது நலம். நண்பர்களிடம் அளவோடு பழகுவது நல்லது.
மகம்: குழப்பம் 
பூரம்: துக்கம்
உத்திரம் 1ஆம் பாதம்: துன்பம்
 
 
கன்னி
கடின உழைப்பால் லாபம் கிடைக்கும். நீண்ட நாளைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். கலைஞர்களுக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். 
உத்திரம் 2, 3, 4: இன்பம்
அஸ்தம்: வெற்றி
சித்திரை 1, 2ஆம் பாதம்: லாபம்
 
 
துலாம்
வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரிக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு ஆதரவு கூடும். கமிஷன் துறையில் இருப்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். 
சித்திரை 3, 4ஆம் பாதம் : மகிழ்ச்சி 
சுவாதி: இன்பம் 
விசாகம் 1, 2, 3: லாபம்
 
 
விருட்சிகம்
சுகமான சந்தோஷமான அனுபவங்களை சந்திக்கும் நாள் . ஆடம்பர பொருட்கள் மீது அதிக நாட்டம் உண்டாகும்.தொழில் போட்டிகளுக்கு தீர்வு காண்பீர்கள். 
விசாகம் 4: மகிழ்ச்சி 
அனுசம்: முன்னேற்றம்
கேட்டை: லாபம்
 
 
தனுசு
சிறுகடன் தொந்தரவு கொடுக்கும். பெற்றோரின் கருத்துக்கள் யோசிக்க வைக்கும். விரும்பிய பணவரவு ஒன்றுக்கும் வாய்ப்புகள் உண்டாகும். 
மூலம்: துன்பம் 
பூராடம்: பயம் 
உத்திராடம் 1ஆம் பாதம்: லாபம்
 
 
மகரம்
தெய்வ வழிபாடு மன நிறைவு தரும். சுப காரிய விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த பணவரவுகளின் மூலம் தங்களது திட்டங்களை நிறைவேற்ற ஏதுவாக இருக்கும்.  
உத்திராடம் 2, 3, 4: தனலாபம்
திருவோணம்: வெற்றி
அவிட்டம் 1, 2 : இன்பம்
 
 
கும்பம்
குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். வேலையாட்களிடம் மென்மையான போக்கை கடைபிடித்தால் அவர்களின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கப்பெறுவீர்கள். பணியில் இருப்பவர்களுக்கு புது பொறுப்புகளும் மாற்றங்களும் ஏற்படும். 
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி 
சதயம் : கவனம்
பூரட்டாதி 1, 2, 3: இன்பம் 
 
 
12.மீனம்
போட்டிகளை எளிதில் சமாளிப்பீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். உடன் பிறப்புக்களால் அனுகூலம் உண்டாகும்.
பூரட்டாதி 4: இன்பம் 
உத்திரட்டாதி : லாபங்கள் 
ரேவதி : முன்னேற்றம்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .