2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இன்றைய பலன்கள் (26.10.2014)

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 25 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள்  (26.10.2014)
 
மேடம்
உறவினர்களின் இல்லத்து நிகழ்வுகளில் பங்கு கொள்வீர்கள். தளர்வடைந்த செயல்களுக்குத் தக்க நபர்களின் உதவியை நாடுவீர்கள். பணிகளில் உங்களுடைய ஒத்துழைப்பு சிறப்புடையதாக இருக்கும்.  
அஸ்வினி : மகிழ்ச்சி 
பரணி : தனலாபம்
கிருத்திகை 1ஆம் பாதம்: இன்பம் 
 
 
இடபம்
பிள்ளைகளின் செயல்கள் உங்களுக்கு பெருமையை தேடித்தரும். எந்த ஒரு சிறு விடயத்தையும் அலட்சியப்படுத்தாமல் இருப்பது நல்லது. வாகனத்தினால் யோகம் உண்டாகும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. 
கிருத்திகை 2, 3, 4: லாபம்
ரோகிணி: மகிழ்ச்சி 
மிருகசீரிடம் 1, 2: கவனம் 
 
 
மிதுனம் 
அதிக வேலைகளால் பெண்களுக்கு ஆரோக்கிய குறைவுகள் ஏற்படலாம். பணிகளில் முனைப்போடு செயல்பட்டு முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் மற்றும் அதன் மூலம் பணவரவும் புகழும் ஏற்படக்கூடும். 
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: துன்பம்
புனர்பூசம் : இன்பம்
 
 
கடகம்
பெண்கள் அனாவசிய பேச்சுக்களை தவிர்ப்பதால் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். சுப செலவுகள் கூடுதலாக இருக்கும். சமாளித்து விடுவீர்கள். குல தெய்வ வழிபாடுகளில் கவனம் தேவை.  
புனர்பூசம்: கஷ்டம்          
பூசம் : அலைச்சல்
ஆயில்யம்: துக்கம் 
 
 
சிம்மம்
புதிய திட்டங்கள் அனைத்தும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். சுப நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடுவீர்கள். எண்ணங்கள் அனைத்தும் படிப்படியாக நிறைவேறும். பணிசுமையில் இருந்து சிறிது விடுபடுவீர்கள். 
மகம்: மகிழ்ச்சி 
பூரம்: இனபம் 
உத்திரம் 1ஆம் பாதம்: லாபம் 
 
 
கன்னி
அனாவசியமாக மற்றவர்களது பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. அனாவசிய செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. வியாபார விடயங்களில் மிகவும் கவனம் தேவை.  
உத்திரம் 2, 3, 4: கஷ்டம் 
அஸ்தம்: துக்கம் 
சித்திரை 1, 2ஆம் பாதம்: துன்பம் 
 
 
துலாம்
பணியிடத்தில் சில மன வேதனைகள் உண்டாகும். கடினமாக உழைத்தால் மட்டுமே பலனை எதிர்பார்க்க முடியும். உடல் நலத்தில் அக்கறை கொள்வது அவசியம்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : துன்பம்
சுவாதி : பயம்
விசாகம் 1, 2, 3: துக்கம்
 
 
விருட்சிகம்
பெண்களுக்கு உற்சாகம் காணப்படும். பல புதிய வாய்ப்புகள் உண்டாகும். இல்லத்தில் பல புதிய சுப செலவுகள் உண்டாகும். 
விசாகம் 4: மகிழ்ச்சி
அனுசம்: இன்பம் 
கேட்டை: லாபம்
 
தனுசு
திடீர் லாபங்கள் மூலம் மனம் மகிழ்ச்சியடையும். முயற்ச்சி செய்த காரியங்களுக்கு நல்ல வெற்றிகள் கிடைக்கும். உடலில் இவ்வளவு நாட்கள் இருந்து வந்த பாதிப்புகள் குறையும். 
மூலம்: லாபம்
பூராடம் : இன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம் : வெற்றி
 
 
மகரம்
திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு சுபசெய்திகள் வந்து சேரும். பூர்வீக சொத்து பிரச்சினைகள் தீரும். பிற இன மக்கள் தங்களுக்கு உதவுவார்கள். 
உத்திராடம் 2, 3, 4: சுபம் 
திருவோணம்: மகிழ்ச்சி  
அவிட்டம் 1, 2: இன்பம்
 
 
கும்பம்
வியாபாரம் விருத்தியடையும். இல்லத்து பெரியவர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். குல தெய்வ வழிபாடுகளில் பங்கு கொள்வீர்கள். 
அவிட்டம் 3, 4: சந்திப்பு
சதயம் : வெற்றி
பூரட்டாதி 1, 2, 3: லாபம்
 
 
மீனம்
வாகன ஆசைகள் நிறைவேறும். நெருங்கிய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கும். பணியிடத்தில் பணியாளர்களின் ஆதரவுகள் கிடைக்கப்பெறுவீர்கள். 
பூரட்டாதி 4: உற்சாகம்
உத்திரட்டாதி : இன்பம்
ரேவதி : மகிழ்ச்சி

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .