2021 மே 08, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (29.10.2014)

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 28 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}இன்றைய பலன்கள் (29.10.2014)
 
மேடம்
அரசாங்க விடயங்கள் சாதகமாக முடியும். நல்ல பங்குதாரர்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் எதிராக செயல்பட்ட அதிகாரியின் பிடியிலிருந்து விடுபடுவீர்கள். 
அஸ்வினி : நன்மை 
பரணி : இன்பம் 
கிருத்திகை 1ஆம் பாதம் : நலம் 
 
 
இடபம்
குடும்பத்தில் இருந்த எதிர்ப்புகள் பிரச்சனைகளெல்லாம் குறையும். சகோதர உறவுகளிடையே மனத்தாங்கள் அதிகமாகும். சொத்து பிரச்சினையில் அவசர முடிவுகள் வேண்டாம்.
கிருத்திகை 2, 3, 4: நன்மை
ரோகிணி : கஷ்டம் 
மிருகசீரிடம் 1, 2: கவனம்
 
 
மிதுனம் 
நோய்கள் மூலம் தொந்தரவு காணப்படும். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். அக்கம் பக்கத்தினரிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. 
மிருகசீரிடம் 2, 3: துன்பம் 
திருவாதிரை: துக்கம் 
புனர்பூசம்: வெறுப்பு
 
 
கடகம்
பணவரவு திருப்திகரமாக இருக்கும். தவிர்க்க முடியாத செலவினங்கள் அதிகமாகும். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
புனர்பூசம்: இன்பம் 
பூசம்: மகிழ்ச்சி 
ஆயில்யம்: ஆர்வம்
 
 
சிம்மம்
வெளிவட்டாரத்தில் சிறப்பாக பேசப்படுவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. உத்தியோகத்தில் இருந்த நிம்மதியற்ற போக்கு மாறும். 
மகம்: இன்பம் 
பூரம்: பிரச்சினை
உத்திரம் 1ஆம் பாதம்: நலம்
 
 
கன்னி
அதிகாரிகளுடன் இருந்த விவாதங்கள் நீங்கும். கூடுதல் சலுகைகள் கிடைக்கும். பழுதான எலக்டிரிக் சாதனங்களை மாற்றுவீர்கள்.
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி
அஸ்தம்: லாபம் 
சித்திரை 1, 2ஆம் பாதம்: இன்பம்
 
 
துலாம்
உடன் பிறந்தவர்களுக்காக பரிந்து பேசுவதால் மனைவியுடன் இடைவெளி அதிகமாகும். பிள்ளைகளால் புகழடைவீர்கள். இடையிடையே பணப் பற்றாக்குறையையும் சமாளிக்க வேண்டி வரும்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : துக்கம் 
சுவாதி : புகழ் 
விசாகம் 1, 2, 3: துன்பம்
 
 
விருட்சிகம்
பிறரின் உதவிகள் எதிர்பார்த்து கிடைக்காமல் போகலாம். தீடீர் பணப் பிரச்சினைகள் உண்டாகும். வியாபாரத்தில் சில வெற்றிகள் தேடி வரும். 
விசாகம் 4: துன்பம்  
அனுசம்: கஷ்டம் 
கேட்டை: இன்பம்
 
 
தனுசு
சுப நிகழ்ச்சிகள் பற்றிய பேச்சுக்கள் நடைபெறும். சக பணியாளர்கள் மத்தியில் சுமூகமான போக்கு காணப்படும். பெண்களுக்கு அன்பான சூழ்நிலைகள் உருவாகும். 
மூலம்: மகிழ்ச்சி 
பூராடம் : நலம் 
உத்திராடம் 1ஆம் பாதம்: இன்பம் 
 
 
மகரம்
வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள நல்ல வாய்ப்புக்கள் வந்து சேரும். வியாபாரிகளின் லாபம் சுமாராக இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். 
உத்திராடம் 2, 3, 4: மகிழ்ச்சி 
திருவோணம்: செலவு
அவிட்டம் 1, 2: இன்பம் 
 
 
கும்பம்
அநாவசிய உறுதி மொழிகளைத் தவிர்ப்பது நல்லது. தந்தை உடல் நிலை பாதிக்கும். கருத்து மோதல்கள் வரும்.
அவிட்டம் 3, 4: துன்பம் 
சதயம் : கஷ்டம்
பூரட்டாதி 1, 2, 3: பயம்
 
 
மீனம்
வெளிநாட்டில் இருப்பவர்கள் வேற்று மதத்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பங்குச் சந்தை மூலம் பணம் வரும். வெளி வட்டாரத்தில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் படி பேசி புகழடைவீர்கள்.
பூரட்டாதி 4: நலம்
உத்திரட்டாதி: லாபம் 
ரேவதி: இன்பம்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X