மேடம்
பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகைப் பயன்கள் கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை அவரவர் தகுதிக்கு ஏற்ப கிடைக்கும். முதலீடுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.
அஸ்வினி : ஆர்வம்
பரணி : இன்பம்
கிருத்திகை 1ஆம் பாதம் : மகிழ்ச்சி
இடபம்
இஷ்ட தெய்வ வழிபாட்டால் வாழ்வில் நன்மை அதிகரிக்கும். லாபவிகிதம் சுமாராக இருக்கும். வருமானம் ஓரளவு இருக்கும்.
கிருத்திகை 2, 3, 4: லாபம்
ரோகிணி : நன்மை
மிருகசீரிடம் 1, 2 : மகிழ்ச்சி
மிதுனம்
வாகனத்தில் மித வேகம் பின்பற்றுவதால் விபத்துக்களைத் தவிர்க்கலாம். விறுவிறுப்பாக செயல்பட்டு நல்ல வளர்ச்சி காண்பர். நிலம் சம்மந்தமான பிரச்சினைகளில் சமரச போக்கு காணப்படும்.
மிருகசீரிடம் 2, 3 : மகிழ்ச்சி
திருவாதிரை : நஷ்டம்
புனர்பூசம் : துன்பம்
கடகம்
உடல் நலம் சீராக இருப்பதற்கு பயிற்ச்சிகளைப் பின்பற்றுவது அவசியம். பணியில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். சுயதொழிலில் லாபம் அதிகரிக்கப்பெறுவீர்கள்.
புனர்பூசம்: சோர்வு
பூசம் : மகிழ்ச்சி
ஆயில்யம் : இன்பம்
சிம்மம்
உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். சொந்த தேவையை நிறைவேற்றுவதில் முக்கியத்துவம் தருவீர்கள். செலவுகளில் சிக்கனம் தேவை.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: வெற்றி
உத்திரம் 1ஆம் பாதம் : சிக்கனம்
கன்னி
முன் யோசனையுடன் செயல்படுவது அவசியம். பணிச்சுமையால் அடிக்கடி உடல் சோர்வு காணப்படும். எதிர்மறை பலன்கள் காணப்படுகின்றன.
உத்திரம் 2, 3, 4: சிரமம்
அஸ்தம்: துன்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: பயம்
துலாம்
நண்பர்களுடன் கூட்டு சேரும் வாய்ப்புகள் உண்டாகும். அரசு அதிகாரிகளிடம் ஓரளவு ஒத்துழைப்புக்கள் கிடைக்கும். சில நேரம் பணியாளர்களிடம் அலைச்சல் காணப்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : மகிழ்ச்சி
சுவாதி: நண்பர் சேர்க்கை
விசாகம் 1, 2, 3: அலைச்சல்
விருட்சிகம்
தொழிலில் விரிவாக்க முயற்ச்சிகளில் ஈடுபடுவீர்கள். பிரயாணங்களின் மூலம் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பணியிடங்களில் முன்னுரிமை கிடைக்கும்.
விசாகம் 4: முயற்சி
அனுசம்: பயணம்
கேட்டை: லாபம்
தனுசு
உடலில் காயங்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. உழைப்பின் மூலம் மட்டுமே உயர்வை அடையலாம். பொறுமை காப்பதால் மட்டுமே நிம்மதி உண்டாகும்.
மூலம்: உதவி
பூராடம் : துன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம்: கஷ்டம்
மகரம்
பணவிரயம் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் உண்டாகும். உடல் நிலையில் அசௌகர்யம் காணப்படும். பணிச்சுமையில் இருந்து விடுபடுவீர்கள்.
உத்திராடம் 2, 3, 4: துன்பம்
திருவோணம்: துக்கம்
அவிட்டம் 1, 2: பிரச்சினைகள்
கும்பம்
தந்தை வழி உறவில் பகை நீங்கி இணக்கம் உண்டாகும். கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். பொருளாதார நிலை உயரும்.
அவிட்டம் 3, 4: விருந்து
சதயம் : இன்பம்
பூரட்டாதி 1, 2, 3: வெற்றி
மீனம்
எதிர்கால நலன்களில் அக்கறை கொள்வீர்கள். நிர்வாகத்தினரிடம் இருந்து ஆதரவைப் பெற்று மகிழ்வீர்கள். சுய தொழிலில் தேவையான லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.
பூரட்டாதி 4: மகிழ்ச்சி
உத்திரட்டாதி : இன்பம்
ரேவதி : லாபம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்.
.