2021 ஜூன் 19, சனிக்கிழமை

ஆப்கானிஸ்தானில் இன்று பூமியதிர்ச்சி;7 பேர் உயிரிழப்பு

Super User   / 2010 ஏப்ரல் 19 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை இடம்பெற்ற பூமியதிர்ச்சியில் ஏழு பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 70 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த பூமியதிர்ச்சி ரிச்டர் அளவுகோலில் 5.3ஆக பதிவாகியுள்ளது.

இன்று அதிகாலை ஒரு மணியளவில் ஏற்பட்ட இந்த பூமியதிர்ச்சியில், மூன்று மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கிராமங்கள் பல அழிவடைந்திருப்பதுடன், மண்சரிவு காரணமாக வீதிகளில் தடை ஏற்பட்டுள்ளது.

இந்த பூமியதிர்ச்சியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடையலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .