2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

ஈராக்கில் குண்டுத் தாக்குதல்; 31பேர் உயிரிழப்பு

Super User   / 2010 மார்ச் 04 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈராக்கிலுள்ள பகுபா நகரில்  நேற்று இடம்பெற்ற மூன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 31 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 12 பேருக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

பக்தாத்தின் வடபகுதியிலிருந்து  40 கிலோமீற்றர் தொலைவிலுள்ள தியாலா மாகாணத்தில் அரசாங்கக் கட்டிடங்களுக்கு அருகில் இரண்டு கார்க் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது.

கார்க்குண்டுத் தாக்குதல்களில்   காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பிரதான வைத்தியசாலையின் மீதும்  குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் சீருடை அணிந்து வந்தவர்களே இந்தக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .