2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

சீகா வைரஸ் தாக்கத்தைபொதுமக்களிடம் அரசாங்கம் மறைத்தது?

Editorial   / 2017 மே 30 , பி.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவில், இதுவரைக்கும் சீகா வைரஸ் நோய் தாக்கத்துக்கு 3 பேர் இலக்காகியுள்ளதாக, இந்திய சுகாதார அமைச்சு அறிவித்ததாக, உலக சுகாதார ஸ்தாபனம், கடந்த வௌ்ளிக்கிழமை (26) அறிவிருத்திருந்த நிலையில், இந்தியாவில், முதலாவது முறையாக சீகா வைரஸ் நோயாளர்கள் தோன்றியிருப்பதை, இந்திய மறைத்துவிட்டதா என்ற கேள்வி தற்போது எழுப்பப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியல், சுமார் 30 நாடுகளில் சீகா வைரஸ் தாக்கம் பதிவாகியுள்ள நிலையில், இந்தியாவில் கடந்த வருடம் நவம்பர் மாதம் தொடக்கம் இந்த வருடம் பெப்ரவரி மாத காலப்பகுதிக்குள், சீகா வைரஸ் தாக்கம் தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்டது.

மருத்துவ ரீதியில் நலமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்ட, கடந்த நவம்பர் மாதம் 9ஆம் திகதி குழந்தையை பிரசவித்த 34 வயதுடைய தாய், 37 வாரங்களான கர்ப்பிணி மற்றும் 64 வயதுடைய ஆண் ஆகிய மூவரே, பாதிக்கப்பட்டிருப்பதாக, ஐக்கிய நாடுகளின் சுகாதார நிறுவனத்தால் அறிக்கையிடப்பட்டிருந்தது.

நோய்த்தாக்கத்துக்குள்ளான தாய்மார், குழந்தைகளைப் பிரசவித்துள்ளதாகவும் 64 வயதுடைய நபர் சிக்கலுக்குள் உள்ளதாகவும் குஜராத் மாநிலத்தின் மூத்த அதிகாரியொருவர் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக, பொதுமக்களுக்கு அறிவித்திருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

எனினும், சீகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளமை குறித்து, பொதுமக்களுக்கு அறிவிக்கப்படாமை குறித்து,

சுதந்திர பொது சுகாதார நிபுணர்கள் மற்றும் ஆய்வாளர்களும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

“இது, இந்திய சுகாதார வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத செயற்பாடாகும். இது, பல நெறிமுறை சிக்கல்களை ஏற்படுத்துவதோடு, குழப்பமான சூழலை உருவாக்குகின்றது. பொதுமக்களுக்கு ஒரு நம்பிக்கையை கொண்டுவரவேண்டும். ஆனால், பயத்தை பரப்பாமல் அது செய்யப்படல் வேண்டும். இதுவொரு, பொதுச் சுகாதார பணியின் ​கொள்கையாகும்” என்று, டெல்லி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவத்துறை பேராசிரியர் ரஜிப் தஸ்குப்தா தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 17ஆம் திகதி, “வழக்கமான ஆய்வகக் கண்காணிப்புகளின் பிரகாரம், ஜனவரி மாதம் வரைக்கும் ஒரேயொரு சீகா நோயாளர் மாத்திரமே அடையாளம் காணப்பட்டுள்ளார்” என்று, சுகாதார கனிஷ்ட அமைச்சர் அனுப்பிரியா பட்டேல், நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்தியாவின் சீகா வைரஸ் தாக்கம், ஜனவரி மாதமளவில் மூவரைத் தாக்கியிருந்தமையால், அரசாங்கம் மக்களுக்கு பொய் கூறியதாக இது அமைந்துள்ளது என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .