2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

சிட்னி கபே முற்றுகை: ‘பொலிஸார் வேகமாக செயற்படவில்லை’

Editorial   / 2017 மே 24 , பி.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவின் சிட்னி கபேயொன்றில், 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற 16 மணித்தியால முற்றுகையொன்றில், பணயக்கைதிகளைப் பிடித்து வைத்திருந்தவர் உட்பட மூன்று பேர் இறந்த நிலையில், இந்த முற்றுகைக்குக் காரணமான துப்பாக்கிதாரியின் மூலம் காணப்பட்ட ஆபத்துக்கு, தேவைப்பட்ட வேகமான அளவுக்கு செயற்பட அவுஸ்திரேலியப் பொலிஸார் தவறிவிட்டதாக, மரணத்தை விசாரணை செய்யும் அதிகாரியொருவர், அறிக்கையொன்றில், இன்று(24) தெரிவித்துள்ளார்.   

லின்ட் சொக்லேட் கபே முகாமையாளர் டொரி ஜோன்சன், வழக்கறிஞர் கட்ரினா டோஸன் ஆகியோரின் இறப்புகளுக்கு, துப்பாக்கிதாரி மன் ஹரொன் மொனிஸே காரணம் எனச் சாடிய, நியூ சவுத் வேல்ஸ் மாநில மரண விசாரணை செய்யும் அதிகாரியான மைக்கல் பார்ண்ஸ், துப்பாகிதாரியான மொனிஸ், எச்சரிக்கை வேட்டொன்றைத் தீர்த்ததைத் தொடர்ந்து, பொலிஸார் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

எச்சரிக்கை வேட்டுத் தீர்க்கப்பட்ட சிறிது நேரத்தில், ஜோன்சனை, மொனிஸ் கொன்றிருந்தார்.

எச்சரிக்கை வேட்டுத் தீர்க்கப்பட்ட 10 நிமிடங்களின் பின்னர் கபேக்குள் நுழைந்த பொலிஸாரால் சுடப்பட்ட சன்னமொன்றால், டோஸன் கொல்லப்பட்டிருந்தார். பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில், மொனிஸ் பின்னர் கொல்லப்பட்டிருந்தார்.   

இந்நிலையிலேயே, குறிப்பிடத்தக்க நடவடிக்கை இல்லாமல், 10 நிமிட இடைவெளியைப் பொலிஸார் எடுத்துக் கொண்டமை, நீண்ட நேரமாகுமென, இரண்டு ஆண்டுகள் விசாரணையைத் தொடர்ந்து, பார்ண்ஸ் கையளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .