2021 ஜூன் 17, வியாழக்கிழமை

சோமாலியாவில்இரட்டை குண்டு தாக்குதல்;30 பேர் பலி

Super User   / 2010 மே 02 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சோமாலியாவில் இடம்பெற்ற இரட்டைக் குண்டுத் தாக்குதல்களில் 30 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 70 பேர் காயமடைந்துள்ளனர்.

சோமாலியத் தலைநகர் மொகடிஷுவிலுள்ள பள்ளிவாசல் மற்றும் சந்தை கட்டிடத் தொகுதியில் இந்த குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது. 

அல் சஹாப் இராணுவ குழுத் தலைவர் ஒருவரை இலக்குவைத்து இந்தக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக குறிப்பிடப்படுகிறது. எனினும், இந்தக் குண்டுத் தாக்குதல்களுக்கு எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை.

இதேவேளை, சோமாலியாவில் 1991ஆம் ஆண்டு முதல் இடம்பெற்றுவரும்  சிவில் யுத்தம் காரணமாக அதிக எண்ணிக்கையிலான  உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .