2021 ஜூன் 16, புதன்கிழமை

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ரலா காலமானார்

Super User   / 2010 மார்ச் 21 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேபாள நாட்டின் முன்னாள்ப் பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ரலா நேற்று காலமானார்.

கடந்த பல மாதங்களாக சுகவீனமுற்றிருந்த கிரிஜா பிரசாத் கொய்ரலா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்திருந்தார். இந்த நிலையில், அவர் நேற்று சனிக்கிழமை காலமாகியுள்ளார்.

 இவர் உயிரிழக்கும்போது வயது 86 ஆகும்.

ஐந்து தடவைகள் நேபாள நாட்டின் பிரதமராக பதவி வகித்த கிரிஜா பிரசாத் கொய்ரலா, ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாவோயிஸ்டுகளை அரசியல் நீரோட்டத்தில் கொண்டுவருவதில் முக்கிய பங்குவகித்தவர் ஆவார்.

இவரது இறுதிக் கிரியை நாளை நடைபெறும் என நேபாள நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கிரிஜா பிரசாத்தின் மறைவு குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தனது அனுதாபத்தை வெளியிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .