Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 21 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்துள்ள காம்பிய ஜனாதிபதி யாஹியா ஜம்மே, தனது பதவியிலிருந்து விலகப் போவதில்லை என உறுதியாகத் தெரிவித்துள்ளதுடன், மத்தியஸ்த நடவடிக்கையில் ஈடுபட்ட மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் என்ற அமைப்பையும் விமர்சித்துள்ளார்.
டிசெம்பர் 1ஆம் திகதி இடம்பெற்ற வாக்கெடுப்பில் தோல்வியடைந்த யாஹியா, தேர்தல் முடிவுகளை ஆரம்பத்தில் ஏற்றாலும், பின்னர் அவற்றை ஏற்க மறுத்துள்ளார். தேர்தல்களை நடத்திய அதிகாரிகளால், பாரிய தவறுகள் இடம்பெற்றுள்ளதாகக் குற்றஞ்சாட்டும் அவர், புதிய வாக்கெடுப்பு இடம்பெற வேண்டுமெனக் கோரியுள்ளார். இதையடுத்து, பல்வேறு தலைவர்களும் அமைப்புகளும், அவருக்கு அழுத்தத்தை வழங்கினர். இறுதியில், மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகமும் அந்த முயற்சியை மேற்கொண்டிருந்தது.
இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, "நான் ஒரு முட்டாள் அல்லன். எனது உரிமையானது அச்சுறுத்தப்படவோ மீறப்படவோ முடியாது. எல்லாம்வல்ல அல்லாவைத் தவிர, யாருமே எனது வெற்றியைப் பறிக்க முடியாது. "மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகக் கூட்டம், வெறுமனே சம்பியரதாயபூர்வமாகவே இருந்தது. அவர்கள் வர முன்னரே, ஜம்மா பதவி விலக வேண்டுமெனச் சொல்லிவிட்டனர். நான் பதவி விலகேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி யாஹியா பதவி விலகிச் செல்லும் போது, அவர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படாது எனத் தெரிவித்துள்ள வெற்றிபெற்றுள்ள அடமா பரோவின் தரப்பு, முன்னாள் தலைவர் என்ற ரீதியில், அவருக்குரிய மதிப்பு வழங்கப்படுமெனத் தெரிவித்துள்ளது.
3 minute ago
6 minute ago
13 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
6 minute ago
13 minute ago