Janu / 2025 டிசெம்பர் 16 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகின்ற நிலையில் ஏற்கனவே முத்துஐயன்கட்டு குளத்தின் நீர்மட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அதன் ரேடியல் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
மேலும் நயினாமடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் மழையால் நீர்வரத்து அதிகரித்து வருவதால், முத்துஐயன்கட்டு குளத்தின் ரேடியல் கதவுகள் தொடர்ச்சியாக திறந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கீழ் பகுதிகளில் வசிக்கும் மக்கள், குறிப்பாக மன்னாகண்டல் – வசந்தபுரம் பகுதிகளில் உள்ளவர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நீர்மட்டம் உயர்வதை கவனித்தால், உடனடியாக கிராம அலுவலர் (Grama Niladhari) அல்லது பிரதேச செயலாளருக்கு தகவல் வழங்கி,
பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப்படுகிறது.
அதேபோன்று, பண்டாரவன்னி பகுதிகளில் வசிக்கும் மக்களும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் வவுனியா வடக்கு பகுதிகளில் பெய்து வரும் மழையால் குறிவிச்சை ஆற்றில் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அலகு தெரிவித்துள்ளது.


6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago