2021 ஜூன் 16, புதன்கிழமை

பராக் ஒபாமாவின் போலாந்து விஜயம் ரத்து

Super User   / 2010 ஏப்ரல் 18 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலாந்து நாட்டு ஜனாதிபதியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக போலாந்து நாட்டுக்கு செல்லவிருந்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது பயணத்தை ரத்துச் செய்துள்ளார்.

ஐஸ்லாந்தில் ஏற்பட்டிருக்கும் எரிமலைக் குமுறலால்  வெளியாகிக் கொண்டிருக்கும் சாம்பல்ப் புகை காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கான விமானசேவை ரத்துச் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே, பராக் ஒபாமா தனது பயணத்தை ரத்துச் செய்துள்ளார்.

ரஷ்யாவில் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்றிருந்த விமான விபத்தில் போலாந்து நாட்டு ஜனாதிபதி லீச் காசியன்ஸிகி, அவரது பாரியார், உயர் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .