2025 ஒக்டோபர் 23, வியாழக்கிழமை

போலாந்து ஜனாதிபதியின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி

Super User   / 2010 ஏப்ரல் 19 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

விமான விபத்தில் உயிரிழந்த போலாந்து நாட்டு ஜனாதிபதி மற்றும் அவரது பாரியாரின்  இறுதிச் சடங்குகள் நேற்று இடம்பெற்றுள்ளன.

போலாந்து நாட்டு ஜனாதிபதி மற்றும் அவரது பாரியார் ஆகியோரின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான மக்கள்,  தங்களது இறுதி மரியாதையை  செலுத்தியுள்ளனர்.

ரஷ்யாவில் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்றிருந்த விமான விபத்தில் போலாந்து நாட்டு ஜனாதிபதி லீச் காசியன்ஸிகி மற்றும் அவரது பாரியார் உட்பட 95 பேர் உயிரிழந்திருந்தனர்.

இதேவேளை, ஐஸ்லாந்திலுள்ள எரிமலைக் குமுறலால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான விமானசேவைகள் ரத்துச்செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, போலாந்து நாட்டு ஜனாதிபதியின இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக செல்லவிருந்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உட்பட ஏனைய நாட்டுத் தலைவர்களும் கலந்துகொள்ளவில்லை.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .