Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2015 நவம்பர் 25 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்ய போர் விமானமானது, துருக்கியால் சுட்டு வீழ்த்தப்பட்டமை, ரஷ்யாவுக்கும் துருக்கிக்குமிடையிலான உறவில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்துமென, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எச்சரித்துள்ளார்.
விமானமானது சுட்டு வீழ்த்தப்பட்டதை 'பயங்கரவாதிகளுக்கு உதவுவோரால் முதுகுல் குத்தப்பட்டமை ஆகும்" எனத் தெரிவித்த புட்டின், அத்தாக்குதலை வேறு எந்த விதத்திலும் வர்ணிக்க முடியாது எனத் தெரிவித்தார்.
'எங்களுடைய விமானம், சிரியப் பகுதியில் வைத்து, துருக்கியின் எ‡ப்-16 ஜெட்டிலிருந்து, வானத்திலிருந்து வானத்தை நோக்கிய ஏவுகணை மூலம் வீழ்த்தப்பட்டது" என புட்டின் தெரிவித்தார்.
விமானமானது, துருக்கிய எல்லையிலிருந்து 4 கிலோ மீற்றர்கள் தொலைவில், சிரியப் பகுதியில் வீழ்ந்ததாகத் தெரிவித்த புட்டின், அது தாக்கப்படும் போது, துருக்கிய எல்லையிலிருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார். எவ்வாறான நிலையிலும் கூட, தங்களது விமானிகளோ அல்லது ஜெட்டோ, எந்த விதத்திலும் துருக்கிக்கு ஆபத்தெதனையும் வழங்கியிருக்கவில்லை எனவும், அது வெளிப்படையானது எனவும் குறிப்பிட்டார்.
விமானம் வீழ்ந்ததைத் தொடர்ந்து, இரண்டு விமானிகளும் வெளியேறியதாக ரஷ்யா தெரிவித்திருந்தது. அவர்களில் ஒருவர், இறந்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.
தேடுதல் நடவடிக்கைகளில், ரஷ்ய ஹெலிகொப்டர்கள் இரண்டு ஈடுபட்டதாகவும், அதில் ஒன்று மீது, மோட்டார் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதன் காரணமாக, அவசரமாகத் தரையிறங்க வேண்டியேற்பட்டதாகவும் தெரிவித்த ரஷ்ய இராணுவத்தினர், அந்த ஹெலிகொப்டரின் விமானி, இறந்துள்ளதாகத் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
34 minute ago
55 minute ago