2021 ஜூன் 14, திங்கட்கிழமை

மொசூலிருந்து வெளியேறிய 50 பேர் கொலை?

Editorial   / 2017 ஜூன் 04 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் கட்டுப்பாட்டிலுள்ள, மொசூலின் புறநகர்ப் பகுதியியொன்றிலிருந்து, அண்மைய நாட்களில் வெளியேறும்போது கொல்லப்பட்ட பொதுமக்களின் டசின் கணக்கான உடல்கள், ஈராக்கிய ஆயுதப் படைகளின் முன்னரங்குக்கருகிலுள்ள வீதியொன்றில், நேற்று  (03) காணப்படுவதாகத், தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இறந்தவர்களில், சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் உள்ளடங்குவதோடு, ஐ.எஸ்.ஐ.ஸ் ஆயுதக்குழுவின் கட்டுப்பாட்டில் இன்னும் காணப்படும் மூன்று மாவட்டங்களில் ஒன்றான ஸன்ஜிலி மாவட்டத்திலிருந்து வெளியேறும் வீதியில், தங்களது உடமைகளை, அவர்கள் காவி வந்த பைகள் சிதறுண்டு காணப்படுகின்றன.   

ஸன்ஜிலியிலுள்ள முன்னரங்கை நோக்கியவாறாகவுள்ள கட்டடமொன்றிலிருந்து நேற்று முன்தினம் கருத்துத் தெரிவித்த, பிறீ பேர்மா றேஞ்சர்ஸ் மீட்புச் சங்கத்தின் டேவ் இயுபாங்க், ஸன்ஜிலி பகுதியிலிருந்து தப்பித்து வரும் மக்களை, கடந்த இரண்டு நாட்களாக, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு சுடுவதாகக் கூறியதுடன், 50க்கு மேற்பட்ட இறந்த உடல்களை, தான், நேற்று முந்தினம் (02) கண்டாரெனக் கூறியுள்ளார்.  

இந்நிலையில், நூற்றுக்கணக்கானோர் தப்பி, அரச நிலைகளுக்கு வந்துள்ள நிலையில், சிலர் காயமடைந்தவர்களாக இருந்த நிலையில், சிலர், போர்வைக்குள் உடல்களைச் சுற்றியபடி வந்துள்ளனர்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .