2021 ஜூன் 16, புதன்கிழமை

மலேஷியாவில் உடனடியான பயங்கரவாத அச்சுறுத்தல்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 20 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உட்பட்ட உலகத் தலைவர்கள் பிராந்திய  மாநாட்டுக்காக மலேஷியாவில் கூடியிருக்கின்ற நிலையில், உடனடியான பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பான உறுதிப்படுத்தபடாத அறிக்கைகளையடுத்து மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரில் இராணுவ வீரர்களை மலேஷியா களமிறக்கியுள்ளது.

கோலாலம்பூரில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் குறைந்தது இரண்டாயிரம் இராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதுடன் வேறொரு 2,500 பேர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

உடனடியான பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பான அறிக்கைகள் உள்ளதாக தெரிவித்த பொலிஸ் தலைமையதிகாரி காலித் அபு பகர், தற்போது வரை அவை உறுதிப்படுத்தப்படவில்லை என நேற்றிரவு அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, மொரோ தேசிய விடுதலை முன்னணி, அபு சயாப், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கிடையே இடம்பெற்ற கூட்டத்தில் அபு சயாப், ஐ,எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆயுததாரிகளை கோலாலம்பூரிலும் மலேஷியாவின் கிழக்கு மாநிலமான சபாவிலும் தரையிறக்க இணக்கம் காணப்பட்டதாக பொலிஸாரின் உள்ளக தகவல் ஒன்று உள்ளூர் ஊடகத்தில் வெளியானதையடுத்தே மலேஷியாவில் பதற்றம் ஏற்பட்டிருந்தது.

மேற்படி தகவலை உறுதிபடுத்திய பகர், குறைந்தது 10 தற்கொலைக் குண்டுதாரிகள் கோலாலம்பூரிலும் ஏனைய எட்டு பேர் நாட்டின் வேறிடங்களில் இருக்கலாம் எனவும் பகர் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .