2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

விமானங்களுக்கான புதிய விதிமுறைகள் அறிமுகம்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 09 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன மலேஷிய எயார்லைன்ஸ் விமானமான MH370 போன்று, எதிர்காலத்தில் நடக்காமலிருப்பதாக, புதிய விதிமுறைகளை, விமானப் பறப்புக்கான ஐக்கிய நாடுகளின் முவராண்மை அறிவித்துள்ளது.

மார்ச் 8, 2014இல் காணாமல்போன அவ்விமானத்தின் இரண்டாவது ஆண்டையொட்டி, கனடாவின் மொன்ட்ரியலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், புதிய விதிமுறைகள் பற்றிய தகவலை, சர்வதேச சிவில் விமான அமைப்பு வெளியிட்டது.

இதன்படி, அனைத்து விமானங்களும், ஆபத்திலிருக்கும் போது அதன் அமைவிடத்தை, நிமிடத்துக்கு ஆகக்குறைந்தது ஒரு தடவையாவது அனுப்பக்கூடிய உபகரணமொன்றைக் கொண்டிருக்க வேண்டுமெனப் பணிக்கப்பட்டுள்ளது. தவிர, விமானிகளின் அறையில் ஒலி, 25 மணித்தியாலங்களுக்குப் பதியப்பட வேண்டுமெனவும் பணிக்கப்பட்டுள்ளது.

புதிதாக வெளியிடப்பட்டுள்ள இந்த விதிமுறைகளில், விமானங்களின் அமைவிடம் குறித்த தகவலை வழங்குவதோடு பாதுகாப்பை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு, இப்போதிலிருந்து 2021ஆம் ஆண்டுவரை இவை நடைமுறையில் இருக்குமெனவும் அறிவிக்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .