Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2015 நவம்பர் 20 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவின் மேற்குப் பிராந்தியமான ஸிங்ஜாங்கில் சீன பாதுகாப்புப் படைகள் 28 தீவிரவாதிகளை கொன்றுள்ளன. இந்தக்குழுவே, கடந்த செப்டெம்பரில் இடம்பெற்ற நிலக்கரிச் சுரங்க தாக்குதலை மேற்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த செப்டெம்பர் 18ஆம் திகதி இடம்பெற்ற இந்த நிலக்கரிச் சுரங்கத் தாக்குதலில் ஐந்து பொலிஸார் உட்பட 16 பேர் கொல்லப்பட்டிருந்ததுடன், வேறு 18 பேர் காயங்களுக்குள்ளாகி இருந்ததாக ஸிங்ஜாங் டெய்லி இன்று செய்தி வெளியிட்டதே, இது பற்றி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாகும்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவின் நிதியில் இயங்கும் வானொலியான ப்ரீ ஏஷியாவே இந்தச் சம்பவத்தை பற்றி முதல் குறிப்பிட்டிருந்ததுடன், 50 பேர் கொல்லப்பட்டதாக கூறியிருந்தது.
தாக்குதலாளிகள் மலைகளில் ஏறிச் சென்றதாகவும், எனினும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர், தப்பமுடியாத வகையில் சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையை மேற்கொண்டதாகவும் ஸிங்ஜாங் டெய்லி தெரிவித்துள்ளது.
56 நாட்கள் தொடர்ச்சியான மோதலின் பின் வெளிநாட்டு கடும்போக்குவாத குழுவின் நேரடிக் கட்டளையில் இயங்கும் வன்முறை தீவிரவாதக் குழுவானது அழிக்கப்பட்டுள்ளதாகவும் சரணடைந்த ஒருவரைத் தவிர ஏனைய 28 பெரும் கொல்லப்பட்டதாக ஸிங்ஜாங் டெய்லி மேலும் தெரிவித்துள்ளது.
பெரும்பாலாக முஸ்லிம்களைக் கொண்ட விகேர்ஸ் சிறுபான்மையின இனத்தின் தாயகமாக ஸிங்ஜாங் காணப்படுகிறது. இங்குள்ள மக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கலாசார, மதக் கட்டுப்பாடுகளினால் ஏற்படும் விரக்தியினாலேயே முரண்பாடுகள் உருவாவதாக மனித உரிமை அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.
எனினும், என்ன காரணத்தால் மேற்படி சம்பவத்தை சீன அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை என்பது தெளிவில்லாமல் உள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
9 minute ago
30 minute ago