Editorial / 2017 ஜூன் 07 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
மியான்மாரின் இராணுவ விமானமொன்று, மெயெக் நகரத்துக்கும் யங்கோன் நகரத்துக்கும் இடையில் வைத்து, காணாமல் போயிருந்த நிலையில், அதன் சிதைவுகள், அந்தமான் கடற்பகுதியில் வைத்துக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, உள்ளூர் அதிகாரியொருவரும் விமானப்படை அதிகாரியொருவரும் தெரிவித்தனர்.
குறித்த விமானம் காணாமல் போனமையை, இராணுவத் தளபதியின் அலுவலகமும் விமான நிலையத் தகவல்களும் முன்னர் உறுதிப்படுத்தியிருந்தது. இந்த விமானத்தில், 116 பேர் பயணித்ததாக அறிவிக்கப்படுகிறது.
அந்தமான் கடலுக்கு மேலாகப் பறந்துகொண்டிருந்த குறித்த விமானத்தைத் தேடுவதற்காக, கப்பல்களும் விமானங்களும் அனுப்பப்பட்டுள்ளன.
விமானத்தில், 105 பயணிகளும் 11 பணியாளர்களும் காணப்பட்ட நிலையில், பயணிகளில் பெரும்பான்மையானோர், இராணுவத்தினரின் குடும்ப உறுப்பினர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அந்தப் பகுதியின் வானிலை, சிறப்பான நிலையில் காணப்படும் நிலையில், தொழில்நுட்பப் பிரச்சினை காரணமாகவே, விமானம், விபத்தில் சிக்கியிருக்கலாம் என, தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன.
08 Nov 2025
08 Nov 2025
08 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Nov 2025
08 Nov 2025
08 Nov 2025