A.P.Mathan / 2010 செப்டெம்பர் 04 , மு.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}


நியூஸிலாந்தின் மூன்றாவது பெரிய நகரமான கிறிஸ்ட்சேர்ச் நகரில் இன்று அதிகாலை பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 7 தொடக்கம் 7.4 ரிக்டர் அளவுகளில் இந்த அதிர்வு பதிவாகியிருக்கிறது. இந்த நில அதிர்வினால் பல கட்டடங்கள் இடிந்து நாசமாகியுள்ளதோடு ஒருசிலர் பாரிய காயங்களுக்கும் உள்ளாகியிருக்கின்றனர்.
கிறிஸ்ட்சேர்ச் நகரிலிருந்து 30 கிலோமீற்றர் தொலைவில் நிலத்துக்கடியில் சுமார் 16.1 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட நில அதிர்வினாலேயே இந்த பாரிய அழிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிர்வினால் உயிரிழப்புகள் ஏதும் இதுவரை பதிவாகவில்லை எனவும் பலர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்தாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
தற்சமயம் மீட்புப்பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்ற அதேவேளை, அந்நகரத்தில் மின்சாரம், புகையிரத சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
12 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
3 hours ago
3 hours ago