Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 08 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொங்கோ கிழக்கு ஜனநாயகக் குடியரசில் இடம்பெற்ற பாரியளவிலான பாலியல் வல்லுறவுச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது கடமையைச் செய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானப் பணியாளர்கள் தவறியுள்ளதாக ஐ.நா.வின் சிரேஷ்ட அதிகாரி அதுல் ஹா தெரிவித்தார்.
இந்த பாலியல் வல்லுறவுச் சம்பவங்களானது முன்னர் அறிவிக்கப்பட்டதை விட மிக அதிகளவில் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிக்கார்களால் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் அவர் கூறினார்.
கடந்த வாரங்களில் சுமார் 500 பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீது பாலியல் வல்லுறவு இடம்பெற்றதாக நம்பப்படுவதாகவும் ஐ.நா.வின் சிரேஷ்ட அதிகாரி குறிப்பிட்டார்.
இந்நிலையில், இந்தக் குற்றங்களை இழைத்ததாகக் கருதப்படும் ருவாண்டா, கொங்கோ கிளர்ச்சிக்காரர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் எனக் கூறிய அவர், இதற்காக அரசாங்கமும் சர்வதேச சமூகமும் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
குடிமக்களை பாதுகாக்கும் பொறுப்பு முதலில் அந்தந்த அரசுக்கள், இராணுவம், பொலிஸாரைச் சார்ந்தது தான். எனினும், நாமும் தவறிவிட்டோம் எனவும் ஐ.நா.வின் சிரேஷ்ட அதிகாரி அதுல் ஹா தெரிவித்தார்.
சமாதானம் பேணுவதற்கான ஐ.நா.வின் உதவிச் செயலாளர் நாயகம் அதுல் ஹயரை ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கொங்கோவுக்கு கடந்த ஜுலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து ஆராய அனுப்பி வைத்திருந்தார்.
ஐ.நா. சமாதானப் படையின் முகாமிலிருந்து அதிக தூரத்தில் இல்லாத லுவுங்கியிலும் அதற்கு அண்மையிலும் 242 வல்லுறவுச் சம்பங்கள் அறிக்கைப்படுத்தப்பட்டிருந்தபோதிலும், வடக்கு மற்றும் கிழக்கு கிவுவின் உவைறாப் பகுதியிலும் வேறு பிரதேசங்களிலும் மேலும் 260 வல்லுறவுச் சம்பவங்கள் நடத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது என அவர் ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு அறிக்கையிட்டுள்ளார்.
தென்கிவுவின் மிக்கி எனும் கிராமத்தில் 74 இவ்வாறான சம்பவங்கள் நடந்ததை அறிந்ததாக அவர் கூறினார். இதில் 7 வயதிற்கும் 15 வயதிற்கும் இடைப்பட்ட 21 பெண்பிள்ளைகளும் 6 ஆண்பிள்ளைகளும் பாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
25 minute ago
35 minute ago
36 minute ago
40 minute ago
Bish Thursday, 09 September 2010 06:28 PM
எங்குதான் சரியாய் செய்தது?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
35 minute ago
36 minute ago
40 minute ago