Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2010 செப்டெம்பர் 09 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க உணவு உற்பத்தி நிறுவனமொன்றில் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோதத்தில் இருவர் கொல்லப்பட்டதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
பிலடெல்பியா மாநிலத்திலுள்ள இந்நிறுவனத்தில் தொழில் புரிந்த பெண் வேலையில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டதால் இத்துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.
பணியிலிருந்து நீக்கப்பட்டு நிறுவனத்திற்கு வெளியே கொண்டு சென்றுவிடப்பட்ட அப்பெண், 10 நிமிடங்களின் பின் காரொன்றில் திரும்பி வந்தார். அவரை தடுப்பதற்கு முன் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் ஒன்றை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் இருவர் கொல்லப்பட்டதுடன் மற்றொருவர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அந்நிறுவனத்தில் சிக்கலான நிலையில் அப்பெண்ணுக்கு அருகில் ஒளிந்திருந்த 7 பேரை பொலிஸார் விடுவித்தனர். ஆனால் அவர்கள் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்ததாக் குறிப்பிடவில்லை.
இவ் அலுவலகத்தில் கடந்த 30 வருடங்களாக தொழில் புரியும் அன்டி ரியான் குறிப்பிடுகையில், 'நான் 03 ஆம் மாடியில் இருந்தப்போது இக்கட்டிடத்தில் துப்பாக்கிச் சத்தம் கேட்டது. நான் ஓடிச் சென்றுப் பார்க்கும் போது அங்கு மூன்று பேர் சுடப்பட்டுக் கிடந்தனர் "எனத் தெரிவித்தார்.
மேற்படி பெண் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
34 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
3 hours ago