2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

சான்பிரான்ஸிஸ்கோவில் பாரிய தீ விபத்து

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 10 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

சான்பிரான்ஸிஸ்கோவில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை பாரிய தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

இயற்கை வாயு எடுத்துச் செல்லும் குழாய் வெடித்து தீப்பற்றியதால் இந்த தீ விபத்து ஏற்பட்டது.

இதன்போது, ஆயிரம் அடிக்கு மேல் தீப்பிழம்பை காணக்கூடியதாக இருந்தது.

இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் பல உயிரிழந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

இந்த தீ விபத்தால் 50 வீடுகள் அழிவடைந்துள்ளன.

இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர் கூறுகையில்,நாம் முதலில் சத்தத்தைக் கேட்டபோது பூமி அதிர்ச்சி என நினைத்தோம். யன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தபோதுதான் விஷயம் விளங்கியது. இவ்வளவு பிரமாண்டமான தீப்பிழம்பை நான் ஒருபோதும் கண்டதில்லை. நாம் வீட்டை விட்டு வெளியேறினோம். வீடு போய்விட்டது. இப்போது என்னிடம் எதுவும் இல்லை எல்லாமே போய்விட்டது. நாம் வீடின்றி உள்ளோம் என்றார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .