Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 15 , மு.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
காஷ்மீர் பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று புதன்கிழமை புதுடில்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.
இராணுவ சிறப்பு அதிகாரச் சட்டத்தை மீளப்பெறுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், பாதுகாப்புத்துறை அமைச்சர் எல்.கே.அந்தோணி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ஏனைய கட்சிகளின் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.
கடந்த 1990ஆம் ஆண்டு முதல் காஷ்மீரிலுள்ள இராணுவத்தினருக்கு விசேட அதிகாரமளிக்கும் சட்டம் அமலிலுள்ளது.
போராட்டக்காரர்களை அமைதிப்படுத்தும் வகையில் இராணுவத்துக்கு விசேட அதிகாரமளிக்கும் சட்டத்தை ரத்து செய்யுமாறு முதலமைச்சர் உமர் அப்துல்லா கோரிக்கை விடுத்திருந்தார். இதனை மத்திய அரசு ஏற்றுக் கொண்ட நிலையில், பாரதீய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன.
எனவே, இது தொடர்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களையும் அறிந்து கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில் இன்று புதுடில்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .