2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

புகுஷிமா கடல்நீரில் கதிர்வீச்சு மட்டம் அதிகரிப்பு

Super User   / 2011 மார்ச் 26 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜப்பானில் பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட புகுஷிமா அணு உலைக்கு அருகிலுள்ள பகுதி கடல்நீரில் கதிர்வீச்சு மட்டம் மிக அதிகமாக காணப்படுவதாக ஜப்பானிய அணு மற்றும் கைத்தொழில் பாதுகாப்பு முகவரகம் தெரிவித்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கதிர்வீச்சு தாக்கமுள்ள அயடீன் அளவு வழமையைவிட 1,250 மடங்கு அதிகமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் அலைகள் மூலம் கதிரியக்க துகள்கள் கலைத்துவிடும். காலப்போக்கில் மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களால் இவை உட்கொள்ளப்படுவதன் மூலம் அத்துகள்கள் மறைந்துவிடும்' என ஜப்பானிய அணு மற்றும் கைத்தொழில் பாதுகாப்பு முகவரகத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

எனினும் இத்தகவல் காரணமாக ஜப்பானிய கடலுணவுப் பொருட்கள் ஏற்றுமதி குறித்த சர்வதேச கவலை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே பல நாடுகள் புகுஷிமா பிராந்தியத்திலிருந்து பால் மற்றும் ஏனைய பொருட்களை இறக்குமதி செய்வதை தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .