2025 ஒக்டோபர் 29, புதன்கிழமை

‘அஸ்வெசும’ தொடர்பில் அதிரடியான அறிவிப்பு

Editorial   / 2025 ஒக்டோபர் 29 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘அஸ்வெசும' இரண்டாம் கட்டத்திற்கு தகுதி பெற்றும், இதுவரை வங்கிக் கணக்குகளைத் திறக்காத பயனாளிகளின் பெயர் பட்டியல் பிரதேச செயலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

இவ்வாறு 'அஸ்வெசும' நலன்புரி நன்மைகள் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டு, இதுவரை வங்கிக் கணக்கு திறக்காத பயனாளிகள், தமது பிரதேச செயலகத்திற்குச் சென்று வங்கிக் கணக்குகளைத் திறப்பது தொடர்பான கடிதத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அந்தக் கடிதத்தை மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை வங்கி அல்லது பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகியவற்றில் தமக்கு வசதியான வங்கிக் கிளையொன்றில் சமர்ப்பித்து, 'அஸ்வெசும' பயனாளி வங்கிக் கணக்கொன்றை திறக்க வேண்டும் எனவும் குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இதுவரை வங்கிக் கணக்குகளைத் திறக்காத, 'அஸ்வெசும' இரண்டாம் கட்டத்திற்கு தகுதிபெற்ற பயனாளிகள், விரைவில் இந்த வங்கிக் கணக்குகளைத் திறந்து, குறித்த வங்கிக் கணக்கு விபரங்களை பிரதேச செயலகங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அந்த அறிவித்தல் மூலம் அறியப்படுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X