2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

பிரான்ஸில் முகத்திரை அணியத் தடை அமுல் ; இரு பெண்கள் கைது

Super User   / 2011 ஏப்ரல் 11 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரான்ஸில் முகத்திரை அணிந்து பொது இடங்களில் நடமாடுவதற்கான தடை இன்று திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ளது. இத்தடையை ஆட்சேபிக்கும் விதமாக முகத்திரை அணிந்துசென்ற இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐரோப்பாவில் இத்தகைய தடையை விதித்த முதலாவது நாடு பிரான்ஸ் ஆகும். அங்கு பொது இடங்களில் முகத்திரை அணிந்து செல்பவர்களுக்கு 150 யூரோ அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களை முகத்திரை அணிந்து செல்ல எவரேனும் கட்டாயப்படுத்தினால் அந்நபருக்கு 30,000 யூரோ அபராதமும் இருவருட காலம் வரையான சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

இத்தடை அமுலுக்கு வந்த சில மணித்தியாலங்களில் தலைநகர் பாரிஸில் இரு பெண்கள் 'நிகாப்' அணிந்து சென்றனர். அவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் 32 வயதான கேன்ஸா ட்ரைடர் எனும் பெண் ஊடகங்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார்.

எனினும் அவர்கள் முகத்திரை அணிந்தமைக்காக கைது செய்யப்படவில்லை எனவும் அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியமைக்காகவே கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் அலெக்ஸி மார்சன் தெரிவித்தார்.

இவ்விருவருக்கும் முகத்திரை அணிந்தமைக்காக அபராதம் விதிக்கப்பட்டதாக என்பது தெரியவரவில்லை.

இதேவேளை வர்த்தகரான ரஷிட் நேக்கஸ் என்பவர் தானும் தனது நண்பியொருவரும் ஜனாதிபதி நிகலஸ் சார்கோஸியின் மாளிகைக்கு முன்னால் நிகாப் அணிந்திருந்தமைக்காக கைது செய்யப்பட்டதாக ஏ.எவ்.பியிடம் கூறியுள்ளார்.

'பொலிஸார் எமக்கு அபராதம் விதிக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் அவர்கள் அபராதம் விதிக்க விரும்பவில்லை' என அவர் கூறினார்.

அத்துடன், முகத்திரை அணிந்து செல்லும் பெண்கள் அபராதம் செலுத்துவதற்கு உதவுவதற்கான நிதியமொன்றை ஆரம்பிப்பதற்காக 20 யூரோ பெறுமதியான தனது சொத்துக்களை விற்கத் தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.


  Comments - 0

 • hamth Thursday, 14 April 2011 03:38 PM

  நிர்வாணமாக ஆடும் பைட்டியக்கரர்களை பர்கவய்ந்டாம இவர்கள்
  இவர்களுக்குட்டன் இன்று நடக்கும் பூமி அதிர்வுகள்
  ஹமத்

  Reply : 0       0

  mujahid Tuesday, 12 April 2011 05:36 PM

  எல்லாம் அவன் பார்த்துக்கொள்வான்...

  Reply : 0       0

  xlntgson Tuesday, 12 April 2011 09:18 PM

  முதலில் சொன்னார்கள் niqab முகத்தை மூடுகின்றவர்களுக்குத் தான் அபராதம் என்று.
  இப்போது hijab தலையை மூடி முகத்தை மூடாத பெண்ணையும் கைது செய்து அபராதம் கட்டச் சொல்லி இருக்கின்றனர்.
  இது சட்டத்துக்கும் புறம்பானது நீதிக்கும் புறம்பானது. நியாயத்துக்கும் புறம்பானது. அதேவேளை அபராதம் கட்ட மறுக்கும் பட்சத்தில் இவர்களை எவ்வளவு காலம் சிறைப்படுத்த இயலும், கையில் காசு இல்லாவிட்டால்?
  முகத்திரை பயங்கரவாத ஒழிப்புக்கு உதவும் என்று கூறிக்கொண்டு இவர்கள் தங்களுக்கு மத மாச்சரியத்தை தீர்த்துக்கொள்ளப் பார்க்கின்றனர்.
  வெட்கம்!

  Reply : 0       0

  RAHEEM. Wednesday, 13 April 2011 02:11 AM

  நிகாப் இஸ்லாத்தின் மாபெரும் கடமைகளில் ஒன்றா? இஸ்லாம் இது போன்ற சட்டங்களை வகுத்திருக்குமா என்று நாமும் நன்றாக ஹதீத்களின் உதவியுடன் ஆராய வேண்டும்....

  Reply : 0       0

  mahaan Wednesday, 13 April 2011 03:16 AM

  இறைவனின் சாபம் மிக விரைவில் ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் (பூமி அதிர்வுகள்) தாக்கும்

  Reply : 0       0

  xlntgson Wednesday, 13 April 2011 08:41 PM

  RAHEEM, நான் இரண்டையும் குறிப்பிட்டிருக்கின்றேன்.
  ஒரு பெண் தன் முகத்தை மூடிக்கொள்ள அரச, பயங்கரவாத சட்டங்கள் தடையாக இருக்குமாயின் -அந்த பெண் விரும்பும் பட்சத்திலும் கூட- தடை விதிக்கலாம். ஆனால் முகத்தை மூடாமல் தலையை மூடிக்கொள்ளத் தடை என்ன சகோதரரே, மத மாச்சரியமா இல்லையா இது?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .