Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
George / 2015 பெப்ரவரி 02 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
எகிப்து நாட்டு சிறையில் 400 நாட்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்த அல்-ஜசீரா செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் பீட்டர் கெரெஸ்டே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
எகிப்து நாட்டைச் சேர்ந்த அல்-ஜசீரா செய்தியாளர்கள் முஹமது பாஹ்மி, பஹேர் முஹமது அவுஸ்திரேலியாவை; சேர்ந்த செய்தியாளர் பீட்டர் கிரேச்டே ஆகியோர் அவதூறாக செய்திகள் வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு எகிப்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் பீட்டர் விடுதலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவர் சைப்ரஸ் வழியாக அவுஸ்திரேலியா திரும்புவார் என்று அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் தெரிவித்துள்ளார்.
பீட்டரோடு தான் தொலைபேசி வாயிலாக பேசியதாகவும், தன்னுடைய விடுதலைக்காக போராடிய அனைத்து அவுஸ்திரேலிய மக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்ததாகவும் ஜூலி பிஷப் குறிப்பிட்டுள்ளார்.
400 நாட்களுக்குப்பின்னர் சிறையில் இருந்து அவுஸ்திரேலியாவை சேர்ந்த பீட்டர் கெரெஸ்டே விடுவிக்கப்பட்டுள்ளதற்கு அல்-ஜசீரா தொலைக்காட்சியின் நிர்வாகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
மேலும், சிறையில் இருக்கும் ஏனைய இரண்டு செய்தியாளர்களையும் விடுதலை செய்யும்வரை, போராட்டம் தொடர்ந்து நடத்தப்படும் என்று அல்-ஜசீரா தொலைக்காட்சி நிர்வாகம் அதன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago
5 hours ago