Editorial / 2019 ஓகஸ்ட் 22 , பி.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்காவுக்குள் புகலிடத்தை வழங்குவதா என நீதிபதிகள் தீர்மானிக்கும் வரையில் காலவரையறையின்றி அகதிக் குடும்பங்களை அதிகாரிகள் தடுத்து வைப்பதை அனுமதிக்கும் விதியொன்றை, முன்னைய 20 நாள் எல்லையை நீக்கி ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம் நேற்று முன்தினம் வெளிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அகதிச் சிறுவர்களை ஐக்கிய அமெரிக்க குடியேற்ற அதிகாரிகள் தடுத்து வைத்திருக்கும் காலத்தைக் கட்டுப்படுத்தும் 1997ஆம் ஆண்டு நீதிமன்ற தீர்ப்பொன்றை பிரதியீடு செய்யவுள்ள குறித்த விதியானது நிச்சயமாக சட்ட ரீதியான சவாலை எதிர்கொள்ளும் எனத் தெரிகின்றது. பழைய தீர்ப்பின்படி 20 நாள்களுக்குள் குடும்பங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில், ஒரு மாதத்துக்குள் குடிவரவைக் கட்டுப்படுத்துவதற்கான ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகத்தின் மூன்றாவது விதியாக இது அமைந்துள்ளது. தனது 2016ஆம் ஆண்டு பிரசாரத்தின் உறுதிமொழியின்படி சட்டரீதியான, சட்டரீதியற்ற குடியேற்றத்தின் மீது ஜனாதிபதி ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய அமெரிக்காவுக்குள் ஐக்கிய அமெரிக்கப் பிரஜைகளல்லாதோருக்கு பிறக்கின்ற குழந்தைகளுக்கு ஐக்கிய அமெரிக்க குடியுரிமையைப் பெறும் உரிமையை நிறுத்துவது குறித்து தனது நிர்வாகம் கவனமாக ஆராய்வதாக செய்தியாளர்களிடம் ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 10 மாதங்களில் 475,000 குடும்ப உறுப்பினர்களை தாங்கள் பிடித்துள்ளதாக அல்லது நிராகரித்துள்ளதாக ஐக்கிய அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர். குறித்த எண்ணிக்கையானது எந்த முன்னைய ஆண்டையும் விட மூன்று தடவைகள் அதிகமானதாகும்.
8 minute ago
40 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
40 minute ago
52 minute ago