Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 மே 08 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதில் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளன. கடந்த வாரம் பேட்டி அளித்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், உக்ரைனுக்கு பிரான்ஸ் படைகள் அனுப்பப்படுமா என்பதை மறுக்க முடியாது என்றார்.
இங்கிலாந்து வெளியுளவு செயலாளர் டேவிட் கெமரூன், ரஷ்யாவின் இலக்குகளை தாக்க இங்கிலாந்தின் நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்த முடியும் என்றார்.
இந்த கருத்துக்கள் ஆபத்தானவை என்றும், ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையேயான பதற்றத்தை அதிகரிக்கும் என்றும் ரஷ்ய ஜனாதிபதி மாளிகையான கிரெம்ளின் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ரஷ்யா தனது அணு ஆயுதங்களை கொண்டு போர் பயிற்சி நடத்த திட்டமிட்டிருப்பதாக வெளிப்படையாக அறிவித்துள்ளது. இது மேற்கத்திய தலைவர்களின் ஆத்திரமூட்டும் பேச்சுக்கான பதிலடி என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன் பலமுறை அணு ஆயுத பயிற்சியை ரஷ்யா நடத்தினாலும் அதை இரகசியமாகவே செய்துள்ளது. இப்போது முதல் முறையாக அதை பகிரங்கமாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.S
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025