Ilango Bharathy / 2021 நவம்பர் 29 , பி.ப. 01:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
அதிகரிக்கும் கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக ஜேர்மனியில் மீண்டும் முழு ஊரடங்கு அமுல் படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியில்,கடந்த சில நாட்களாக, கொரோனாத் தொற்றுப் பரவலானது தீவிரமடைந்து வருகின்றது. குறிப்பாக கடந்த ஏழு நாட்களில் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துக் காணப்படுவதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் இதனைக் கட்டுப்படுத்த அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அந்தவகையில் நாட்டில் உள்ள அனைவருக்கும் விரைவில் கொரோனாத் தடுப்பூசி செலுத்தப்படுமென என அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளார்.
மேலும் நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025