2026 மே 18, திங்கட்கிழமை

dd

சர்வதேச அவசரநிலையாகப் பிரகடனப்படுத்தப்பட்ட கொங்கோ எபோலா பரவல்

Shanmugan Murugavel   / 2026 மே 18 , பி.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா பரவலொன்றை சர்வதேச கரிசனையுள்ள பொதுச் சுகாதார அவசரநிலை என உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனப்படுத்தியுள்ளது.

கொங்கோவின் கிழக்கு இதுரி மாகாணத்தில் தொற்றுள்ளதாக 246 பேர் சந்தேகிக்கப்படுவதுடன், 80 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதைய எபோலா பரவலானது புன்டிபுக்யோ வைரஸாலே ஏற்படுவதாக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது. இதற்கு அங்கிகரிக்கப்பட்ட மருந்துகளோ அல்லது தடுப்பூசிகளோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப அறிகுறியாக காய்ச்சல், தசை நோவு, களைப்பு, தலையிடி, வறண்ட தொண்டை என்பனவும் தொடர்ந்து சத்தி, வயிற்றோட்டம், கடி, இரத்தம் கசிதல் என்பனவும் காணப்படும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X