2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

அதிக லைக்ஸ் பெறவேண்டி நேரலையில் பரிதாப பலி

Freelancer   / 2024 ஜூலை 22 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் பிரபல யூட்யூபராக இருந்த பெண் நேரலையில் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் தற்போதைய தலைமுறை இடையே யூட்யூப், இன்ஸ்டாகிராம் மோகம் அதிகரித்துவிட்ட நிலையில் யூட்யூப் கிரியேட்டர்களும் அதிகரிக்க தொடங்கியுள்ளனர்.

அவ்வாறாக சீனாவில் உணவு வீடியோக்கள் செய்து பிரபலமானவர்தான் பான் ஜியோடிங் என்ற பெண். இவர் உணவுகளை அதீதமாக சாப்பிடுவது, உணவு விமர்சனம் செய்வது என பல வீடியோக்களை செய்து பிரபலமானார்.

அதேசமயம் அதீதமான உணவுகளின் காரணமாக இவர் உடல் எடை வேகமாக அதிகரித்தது. 120 கிலோ எடையில் இருந்த பான் ஜியோடிங் சமீபத்தில் உணவு செரிமான கோளாறு தொடர்பான சிகிச்சையும் எடுத்துக் கொண்டிருந்துள்ளார்.

அப்படியிருந்தும் மருத்துவமனையிலிருந்து வெளியான சில நாட்களிலேயே உணவு சவால் ஒன்றை நேரலையில் வீடியோவாக தனது சேனலில் செய்துள்ளார்.

சுமார் 10 கிலோ எடையுள்ள உணவுகளை அவர் தொடர்ந்து சாப்பிட்டு லைவ் செய்துள்ள நிலையில், அவர் திடீரென மயங்கி விழுந்து இறந்துள்ளார்.

இந்நிலையில், அவர் அதிகமான உணவுகளை சாப்பிட்டதும் அவை செரிமானமாகாமல் இருந்ததுமே அவர் உயிரிழக்க காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.S


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X