2025 ஜூலை 19, சனிக்கிழமை

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கிறிஸ் ரொக்; அதிர்ச்சியில் ரசிகர்கள்

Ilango Bharathy   / 2022 ஓகஸ்ட் 31 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
 அமெரிக்காவின்  லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சென்ற மார்ச் மாதம் நடப்பு ஆண்டிற்கான 94வது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா நடந்தது.

 இவற்றில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர்விருது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு முதல் முறையாகக் கிடைத்தது. “கிங் ரிச்சர்ட்” படத்தில் நடித்ததற்காக இவ்விருதை அவர் பெற்றார். விருது வழங்கும் நிகழ்ச்சியில் வில்ஸ்மித்தின் மனைவியான ஜடா பிங்கெட்டின் தலை முடியைக் கேலி செய்யும் விதமாகப் பேசினார்.
 
இதனால் ஆத்திரமடைந்த வில் ஸ்மித் மேடைக்கு சென்று கிறிஸ் ராக் கன்னத்தில் அறைந்தார். சக நடிகரை வில்ஸ்மித் தாக்கிய சம்பவம் உலகளவில் பல விவாதங்களை கிளப்பியது.
 
 இந்த சூழ்நிலையில் அடுத்த வருடம்  நடைபெறவுள்ள ஒஸ்கார் விருது நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்பை கிறிஸ்ரொக் நிராகரித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X