Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 ஏப்ரல் 22 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் முன்னணி மின்சாரக் கார் உற்பத்தி நிறுவனமாக, உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் உள்ள எலான் மஸ்கின் ‘டெஸ்லா‘ நிறுவனம் திகழ்கின்றது.
cஇறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ”அவுஸ்திரேலியாவில் சுமார் 15 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்திற்கு சூரிய சக்தி மூலம் டெஸ்லா காரை மின்னேற்றி பயணிப்பதற்கான சோதனை முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்” எனத் தெரிவிக்கயப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ள இச் சோதனை ஓட்டத்தில் இலகுவாக சுருட்டி எடுத்துச்செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள பிரத்தியேக அச்சிடப்பட்ட சோலார் பேனல்கள் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இச் சோதனை ஓட்டத்தின் போது பகல் நேரங்களில் எப்போதெல்லாம் காரின் பட்டரிக்கு மின் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் காரை நிறுத்தி, குறித்த சோலார் பேனல்களை விரித்து மின் எற்றி விட்டுத் தொடர்ந்து பயணம் செய்யலாம் எனவும் விஞ்ஞானி பால் டஸ்டூர் தெரிவித்துள்ளார்.
வழக்கமான சோலார் செல்கள் இயற்கையாக கிடைக்கும் சிலிக்கனில் இருந்து தயாரிக்கப்படும் நிலையில், இவ்வகை சோலார்கள் இயற்கையாக கிடைக்கும் பொலிமர் வேதி பொருட்களை மைய்யாக மாற்றி, பிளாஸ்டிக் போன்ற எளிதில் மடங்கும் பொருட்கள் மீது அச்சிடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இம் மையின் மீது சூரிய ஒளி படும்போது மின்சாரம் உருவாகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெஸ்லாவின் இப்புதிய முயற்சிக்கு மக்கள் பெரும் வரவேற்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
33 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
2 hours ago
2 hours ago