Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Ilango Bharathy / 2022 மே 17 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
30ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யாவில் கிளைகளை நிறுவி வருவாய் ஈட்டி வந்த ‘மெக்டொனால்ட்ஸ்‘நிறுவனம் அதிரடி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக உக்ரேன் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையயில் உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ரஷ்யாவில் உள்ள தனது 850 கிளைகளை முழுமையாக மூட முடிவு செய்துள்ளதாக ‘மெக்டொனால்ட்ஸ்‘ நிறுவனம் அறிவித்துள்ளது.
அத்துடன் தற்போது அனைத்து கிளைகளையும் உள்ளூர் முதலிட்டாளர்களிடம் விற்க முயன்று வருவதாகவும், நிறுவனம் கைமாறும் வரை 62,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .