2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

‘அந்த ஹோட்டலில் தங்க வேண்டாம்‘; அமெரிக்கா எச்சரிக்கை

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 26 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 பாகிஸ்தானின் தலைநகரான  இஸ்லாமாபாத்தில் உள்ள ” பிரபல நட்சத்திர ஹோட்டலான மரியாட்டில் தங்க வேண்டாம்” என அமெரிக்க அரசு தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக அமெரிக்கா உளவுத்துறைக்குக் கிடைத்த தகவலையடுத்தே பாகிஸ்தானிலுள்ள தமது  நாட்டவர்களுக்கு அமெரிக்கா  எச்சரித்துள்ளது.

அத்துடன் விடுமுறை நாட்களில், வழிபாட்டுத் தலங்கள் மற்றும்  மக்கள் நெரிசல் மிக்க இடங்களுக்குச் செல்வதைத்  தவிர்க்குமாறும் அமெரிக்க அரசு கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .